ETV Bharat / state

மேட்ரிமோனி இணையதளம் மூலம் பண மோசடி - இரண்டு நைஜீரியர்கள் கைது! - மேட்ரிமோனி இணைய தளம் மூலம் பண மோசடி -

திருமண இணையதளத்தில் போலி விளம்பரம் கொடுத்து சென்னை பெண்ணிடம் ரூ.3.45 லட்சம் மோசடி செய்த நைஜீரியர்கள் இரண்டு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Nigerians
Nigerians
author img

By

Published : Sep 5, 2021, 10:25 PM IST

சென்னை : திருமண இணையதளத்தில் போலி விளம்பரம் கொடுத்து சென்னை பெண்ணிடம் ரூ.3.45 லட்சம் ரூபாய் பணத்தை நைஜீரியர்கள் மோசடி செய்துள்ளனர். இதையடுத்து,"ஆப்ரேஷன் D" என்ற பெயரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து டெல்லியில் பதுங்கி இருந்த நைஜீரியர்கள் இரண்டு பேரை கைது செய்தனர்.தலைமறைவான மேலும் இரண்டு நைஜீரியர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கைதான இரண்டு நைஜீரியர்கள் மோசடி பணத்தை பெற்று வேறு சில வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் நைஜீரியர்களின் நான்கு வங்கி கணக்குகளை முடக்கம் செய்து சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

17 வங்கி கணக்குகளை நான்கு பேரும் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அது தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணியில் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு நைஜீரியர்களில் ஒருவர் பெண்.

அவர்கள் தொடர்பான விவரங்களை டெல்லி காவல்துறையினருக்கு கொடுத்து டெல்லியில் எங்கு பதுங்கி உள்ளார்கள்? என்பதை தேடும் படி டெல்லி காவல்துறையினர் உதவியை நாடியுள்ளது சைபர் கிரைம் காவல்துறையினர். கைதான இரண்டு பேரின் பாஸ்போர்ட்களை முடக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரம் காட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : மதுபோதை தலைக்கேறி அஞ்சலகத்தில் தூங்கும் அஞ்சலக ஊழியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.