இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”கரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வராததால், இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக்கொள்கிறேன். குறைந்தபட்சம் 300 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்திற்காவது விலக்கு அளிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
![தினகரன் ட்விட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01:44_tn-che-04-ttvtweet-7209106_04062020131656_0406f_1591256816_216.jpg)
மேலும் மற்றொரு ட்வீட்டில்,தமிழ்நாடு முழுவதும் மின் கட்டணத்திற்கான வரம்பை நிர்ணயிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார்களின் மீது உரிய கவனத்தோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
![தினகரன் ட்விட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01:44_tn-che-04-ttvtweet-7209106_04062020131656_0406f_1591256816_948.jpg)