சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசித்து வருபவர் விஸ்வநாதன். இவர் சென்னையிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலை, நெமிலிச்சேரியில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றிருந்த போது, இவரது வீட்டில் 110 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்துவந்த நிலையில், இன்று இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தானராஜ், அரவிந்தன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:
மருத்துவரிடம் ஹாண்ட்பேக் பறிப்பு - கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்