ETV Bharat / state

தமிழ்நாட்டில் பெட்ரோல்,மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு சம்பவம்...23 பேர் கைது - பாஜக

தமிழ்நாட்டில் பெட்ரோல், மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு மற்றும் கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மண்ணெண்ணை பாட்டில் வீச்சு மற்றும் கல்வீச்சு தொடர்பாக 23 பேர் கைது

author img

By

Published : Sep 28, 2022, 7:32 AM IST

சென்னை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த 22ஆம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தமிழ்நாட்டை சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 11 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சோதனையை கண்டிக்கும் விதமாக பல இடங்களில் அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டும், பேருந்துகள் மீது கல் வீச்சு தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக கோவையில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்கள் என தொடர்ச்சியாக 7 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. இதை தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம் போன்ற இடங்களில் பாஜக பிரமுகர்களின் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இதனால் தமிழ்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் கமாண்டோ படையினர், சிறப்பு அதிரடி படையினர் உட்பட ஆயிரக்கணக்கான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட 100 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்தார்.

தமிழ்நாட்டில் நடந்த மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு சம்பவம் தொடர்பாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 11 வழக்குகளில் 14 பேர் நேற்று வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மண்ணெண்ணெ பாட்டில் வீச்சு மற்றும் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக மேலும் 4 வழக்குகளில் 9 நபர்களை கைது செய்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை மாநகரில் மண்ணெண்ணெய் பாட்டில் வீசியதாக துடியலூரை சேர்ந்த சதாம் உசேன் என்பவரையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய குலச்சலை சேர்ந்த முஸாமில் என்பவரையும் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்ணெண்ணெய் பாட்டிலை வீசி கார்களை சேதப்படுத்தியதாக அப்துல் அக்கீம், சையது இப்ராஹிம், ஷா அப்துல் அஜீஸ் ஆகியோரையும், திருவாரூர் மாவட்டத்தில் அரசு பேருந்தின் கண்ணாடியை கல் வீசி சேதப்படுத்தியதாக முகமது சாகுல் ஹமீது, அஹமதுல்லா, முகமது மகாதீர் மற்றும் ஹாஜா நவாஸ் என 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 15 வழக்குகளில் 23 நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள வழக்குகளில் குற்றவாளிகளை தேடி வருவதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை - சிபிசிஐடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.