ETV Bharat / state

பன்னிரெண்டாம் வகுப்பு மறுத்தேர்வு 519 பேர் எழுதினர்!

சென்னை: கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற மறு தேர்வினை மாநிலம் முழுவதும் 519 மாணவர்கள் மட்டுமே எழுதியுள்ளனர்.

Twelfth Class Re-examination; Only 519 people wrote!

author img

By

Published : Jul 27, 2020, 10:40 PM IST

தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மார்ச் 24ஆம் தேதி எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். மேலும் மாநிலம் முழுவதும் 32,000 மாணவர்கள் தேர்வினை எழுதுவர் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்வெழுதாத பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இதற்காக 289 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. ஒரு தேர்வு மையத்திற்கு ஐந்து ஆசிரியர்கள் என பணி அமர்த்தப்பட்டனர்.

பன்னிரெண்டாம் வகுப்பு மறுதேர்வு எழுதுவதற்கு பள்ளி மாணவர்கள் 175 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 147 பேர் தேர்வினை எழுதியுள்ளனர். அதேபோல் தனித்தேர்வர்களாக 673 பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், 372 பேர் தேர்வினை எழுதியுள்ளனர்.

தேர்வினை எழுத மாணவர்களுக்காக மறுதேர்வு அறிவிக்கப்பட்ட போதும் மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வினை எழுதாமல் புறக்கணித்துள்ளனர். சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 519 பேர் மட்டுமே தேர்வினை எழுதிவுள்ளனர்.

இவர்களுக்குரிய விடைத்தாள்கள் மாவட்ட அளவிலேயே திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகள் விரைவாக தேர்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: நாகர்கோவில் திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜனுக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.