ETV Bharat / state

தேர்தல் நேரத்து கவர்ச்சி வாக்குறுதிகள் என்ன ஆயின? : டிடிவி தினகரன் கேள்வி

கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, தமது நிதிநிலை அறிக்கையில் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றிய அறிவிப்புகளை வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் கேள்வி
டிடிவி தினகரன் கேள்வி
author img

By

Published : Aug 14, 2021, 2:13 AM IST

சென்னை: புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று (ஆக.13) முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது. 2021-22 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்து , லிட்டருக்கு ரூ.5 விலையைக் குறைப்போம் என்று சொன்னவர்கள் இப்போது பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு ரூ.3 மட்டும் குறைத்திருக்கிறார்கள். இது ஆறுதலளித்தாலும், விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான டீசல் விலையைக் குறைக்கும் வகையில் அதன் மீதான வரியையும் தமிழ்நாடு அரசு குறைக்க வேண்டியது அவசியம்.

செயல் திட்டம் இல்லை

வரி வருவாயில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளப் போவதாக நிதியமைச்சர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் சீர்திருத்தத்தை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பதற்கான செயல் திட்டம் (Road Map) பட்ஜெட்டில் இல்லை.

1

அதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எவ்வித பாதிப்புக்கும் ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. தேர்தல் நேரத்தில் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத் தொகை, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன் ரத்து என்று வாய்க்கு வந்தபடி அடித்துவிட்டவர்கள், தற்போது அதனை செயல்படுத்தாமல் இழுத்தடிப்பதற்கான வழிகளைத் தேடுவதைப் போன்று தெரிகிறது. இது, திமுக தனது வழக்கப்படி மக்களை பட்டவர்த்தனமாக ஏமாற்ற நினைக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

2

சென்னை 2.0

கல்விக்கடன் ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் போன்றவற்றுக்கான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்தப் போவதாக திமுக அரசு அறிவித்திருப்பதைப் பார்க்கும் போது, அவர்கள் இதற்கு முன் 'ரொம்பவும் சிறப்பாக( ! ) ' செயல்படுத்திய சிங்கார சென்னை மற்றும் கூவம் சீரமைப்புத் திட்டங்கள் நம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 2.0 திட்டமும் அப்படி ஆகிவிடக் கூடாது.

காகிதமில்லா பட்ஜெட் - காகிதப்பூ மாலையா?

மேலும் அரசு ஊழியர் ஓய்வூதிய வயது குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்துதல் போன்ற எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அறிவிப்புகளும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. மொத்தத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்கு மட்டுமான திமுக அரசின் ' காகிதமில்லா பட்ஜெட் ', வெறும் காகிதப்பூ மாலையா? அல்லது மக்களுக்கு பயன்தரும் வாசமலரா? என்பதை பட்ஜெட்டில் அறிவித்தவற்றை அவர்கள் செயல்படுத்தும் விதத்தைப் பார்த்தே முடிவு செய்ய முடியும் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் - மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.