ETV Bharat / state

ஆளுநரின் கால அவகாச கோரிக்கையில் நியாயமில்லை- டிடிவி தினகரன் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கால அவகாசம் கோருவதில் எவ்வித நியாயமும் இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
author img

By

Published : Oct 23, 2020, 12:25 PM IST

Updated : Oct 23, 2020, 1:09 PM IST

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்தக் கடிதத்திற்கு பதிலளித்த ஆளுநர் பன்வாரிலால், உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு பதிலளிக்க தனது மூன்று முதல் நான்கு வாரம் வரையிலான கால அவகாசம் தேவை எனக் கூறியுள்ளார்.

ஆளுநரின் இந்த பதில் குறித்து கருத்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏற்கனவே 45 நாள்களாகிவிட்டது. இந்நிலையில், அதுகுறித்து முடிவெடுக்க இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்கள் தேவை என்று ஆளுநர் கூறியிருப்பதில் எவ்வித நியாயமும் இருப்பதாக தெரியவில்லை.

  • மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏற்கனவே 45நாட்களாகிவிட்ட நிலையில் அதுகுறித்து முடிவெடுக்க இன்னும் 3-4 வாரங்கள் தேவை என்று ஆளுநர் கூறியிருப்பதில் எவ்வித நியாயமும் இருப்பதாக தெரியவில்லை.

    — TTV Dhinakaran (@TTVDhinakaran) October 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மருத்துவப் படிப்பில் சேர காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் மனநிலையை உணர்ந்து ஆளுநர் விரைவில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகே, தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Oct 23, 2020, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.