ETV Bharat / state

சனாதனத்தைக் குறித்து ஆளுநர் பேசத் தேவையில்லை - டிடிவி தினகரன்

author img

By

Published : Nov 14, 2022, 5:44 PM IST

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்வதை அவர் வீட்டில் கூட கேட்காத நிலையில், அவர் சனாதனத்தைப் பற்றி பேசத் தேவையில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மேம்படுத்தப்பட்ட அமமுக-வின் வலைதளத்தை இன்று (நவ.14) தொடங்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், 'அமமுகவின் வலைதளத்தை மேம்படுத்தியுள்ளோம். ammk.com மூலம் கட்சி சம்பந்தப்பட்ட அனைத்துப் பதிவுகளும் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம். திமுகவை எதிர்ப்பதற்காக வரும் நாடாளுமன்றத்தேர்தலிலும் கூட்டணி அமைப்போம்.

அதிமுக என்ற கட்சி இன்று செயல்படாத நிலையில், திமுக என்ற தீய சக்தியை எதிர்த்து அனைத்துத் தேர்தல்களிலும் நாங்கள் கூட்டணி அமைப்போம். நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை அதிமுக என்ற கட்சி பற்றி பேச எதுவும் இல்லை. வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், வருகிற 2023 நவம்பர்-டிசம்பரில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அமமுக அணில்போல் செயல்பட்டுத் தேர்தலை சந்திப்போம்.

மேலும், 10 விழுக்காடு இடஒதுக்கீடு விவகாரத்தைப் பொறுத்தவரையில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதிக்காத வகையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும். அம்மா பெற்று தந்த 69 விழுக்காடு இடஒதுக்கீடுக்குப் பாதிப்பு வராமல் இருக்க அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். வடகிழக்குப் பருவமழையையொட்டி, தமிழ்நாடு அரசு சரி வர செயல்பட்டு மக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு வராத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாடு அரசை குறைகூறுவதைவிட, இன்னும் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

நளினி உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை வரவேற்கிறோம். நீண்ட நாட்களாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சவுக்கு சங்கரை மீண்டும் கைது செய்தது ஜனநாயக விரோதமான தவறான நடவடிக்கை.

காங்கிரஸை திமுக கழட்டி கூட விடலாம். மேலும், ஆட்டுக்குத் தாடி எப்படி தேவை இல்லையோ.. நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை என்ற அண்ணாவின் கருத்துதான் எங்கள் கருத்து. ஆளுநர் சனாதனத்தைப் பற்றி பேச தேவையில்லை. ஆளுநர் சொல்வதை அவர் வீட்டில் கூட கேட்க மாட்டார்கள். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தாலே இப்படித்தான் பேசுவார்களோ என எனக்கு தெரியவில்லை.

நிச்சயம் மழை வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்வேன். மழைநீர் வடிகால் பணிகளை முன்கூட்டியே ஆரம்பித்தாலும் எதிர்பாராத மழையே பாதிப்பிற்குக் காரணம். மழை வெள்ளப்பாதிப்புகளில் அரசு செயல்படவில்லை எனக் குறைக்கூற முடியாது. இன்னும், சிறப்பாக செயல்பட வேண்டும். ஆவின் பால் விலையை அரசு குறைக்கவேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: எனது சந்திப்பால் முதலமைச்சருக்கு சிக்கல் வருமோ என்ற அச்சம் உள்ளது - நளினி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.