ETV Bharat / state

ஓபிஎஸ்-ன் தொடர் வீழ்ச்சி... எழுச்சியாக அமையுமா திருச்சி மாநாடு...?

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்-க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள இந்த சூழலில், நாளை திருச்சியில் நடைபெறவுள்ள மாநாடு அவரது அரசியல் எழுச்சிக்கு உதவுமா? என்பது குறித்து ஆராய்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

author img

By

Published : Apr 23, 2023, 10:35 PM IST

Trichy
ஓபிஎஸ்

சென்னை: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வார்டு செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஓபிஎஸ், பல்வேறு கட்டங்களை கடந்து மாநில முதலமைச்சர் பதவி வரை அடைந்தார். 2001, 2014 காலகட்டங்களிலும், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகும் என மொத்தம் மூன்று முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலா குடும்பத்தின் அழுத்தம் காரணமாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ், அவர்களை எதிர்த்து 2017ஆம் ஆண்டு தர்மயுத்தம் நடத்தினார். அந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மிகப்பெரிய ஆதரவு இருந்தது. 11 எம்.ஏக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவோடு சில மாதங்கள் பயணித்த பன்னீர்செல்வம், பின்னர் சசிகலா, டிடிவி தினகரன் சிறை சென்றதை தொடர்ந்து. அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒரு சில நிபந்தனைகளுடன் கைகோர்த்தார்.

அதில் முக்கியமானவை, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையம் அமைக்க வேண்டும் என்பது ஆகும். இரண்டு அணிகள் இணைந்து செயல்பட்ட போது ஓபிஎஸ்-க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும், இவருடன் இருந்த எம்.எல்.ஏக்களில் மாஃபா பாண்டியராஜனுக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை என நான்கு ஆண்டுகள் முட்டலும் மோதலுமாக நகர்ந்தது. இந்த நான்கு ஆண்டு காலத்தில், ஓபிஎஸ் அணியில் இருந்த நிர்வாகிகளை ஈபிஎஸ் தன்வசப்படுத்த தொடங்கினார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்ததால், அந்த முயற்சி அவருக்கு கைகொடுத்து. குறிப்பிட்ட சிலரைத் தவிர, பெரும்பாலான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் பக்கம் சாயத் தொடங்கினர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனைத்து விவகாரங்களிலும் ஓபிஎஸ் ஓரம்கட்டப்பட்டார். 2017ஆம் ஆண்டு அணிகள் இணையும் போது 2021-ல் முதலமைச்சர் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என இருவரும் பேசி முடிவு செய்திருந்தனர். ஆனால், ஓபிஎஸ்ஸே எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்தார். இதனால், ஓபிஎஸ் ஆதரவாளரிடம் அவர் நம்பிக்கை இழந்தார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும் கூட்டணியோடு 75 இடங்கள் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. எதிர்க்கட்சி தலைவராக ஆகலாம் என நினைத்த ஓபிஎஸ்ஸிற்கு அதுவும் கிடைக்கவில்லை.

'எம்.எல்.ஏக்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக இருக்கின்றதோ அவர்களே எதிர்க்கட்சி தலைவர்' என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார். ஆனால், ஓபிஎஸ்ஸிற்கு 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்தது. தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் பதவியில் மட்டும் பயணம் செய்து கொண்டிருந்த ஓபிஎஸ்ஸிற்கு மாநிலங்களவை தேர்தல் இறுதி அத்தியாயத்தை எழுதியுள்ளது. மாநிலங்களவை தேர்தல் முதலில் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் பெயர் இருந்தது. ஆனால், கையெழுத்து போட மறுத்த ஓபிஎஸ் ராமநாதபுரத்தை சேர்ந்த தர்மருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கினார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஒற்றை தலைமை பிரச்சனையை தொடங்கினர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். இதில் ஓபிஎஸ் மாறி மாறி நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்த நிலையில், இறுதியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டார். பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத நிலையில், ஓபிஎஸ் பெரும் பின்னடைவை சந்தித்தார். ஆனால், ஆரம்பத்திலேயே தன்னுடைய ஆதரவாளர்கள் குறைவாக இருப்பதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் எந்த நம்பிக்கையில் தர்மயுத்தம் 2.0 தொடங்கினார்? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் நாளை(ஏப்.24) ஓபிஎஸ் தலைமையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடைபெறவுள்ளது. இதில் 5 லட்சத்திற்கு மேல் மக்களை திரட்டி தங்களது தரப்பு செல்வாக்கை நிரூபித்து விடலாம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுப்பதாக ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனால், தற்போது வரை அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. திருச்சியில் நடைபெறவுள்ள மாநாட்டில் அதிமுக பெயரையோ, கட்சி கொடியையோ, சின்னத்தையோ பயன்படுத்த கூடாது எனவும், அப்படி பயன்படுத்துவது நாகரீகமாக இருக்காது எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இதற்கு, 'அதை சொல்வதற்கு அவர் யார்? - பயன்படுத்துவதற்கு வழக்கு போட்டால் சந்திக்க தயார்' என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த மாநாடு ஓபிஎஸ்-ன் எழுச்சிக்கு வழிவகுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஓபிஎஸ்-ன் இந்த மாநாடு குறித்து பேசிய பத்திரிகையாளர் மணி, "அதிமுகவில் ஓபிஎஸ்-ன் அரசியல் பயணம் முடிந்துவிட்டது என அவருக்கே தெரியும். ஆனால், தோல்வியை ஒப்புக் கொள்ள ஓபிஎஸ் மறுக்கிறார். பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ளனர். இதனால், அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி வசமானது. திருச்சி மாநாடு மூலம் மீண்டும் அதிமுகவில் முதல் இடத்திற்கு ஓபிஎஸ் வரமுடியாது என கருதுகிறேன். ஆனால், மாநாட்டிற்கு கூட்டத்தை கூட்டி விடுவார்கள்.

சசிகலா மாநாட்டிற்கு வருவது சந்தேகம்தான். சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் ஒன்றிணைந்தால் யார் தலைமை? என்பதில் சிக்கல் இருக்கிறது. அதையும் மீறி ஒரு சில சமரசங்களுடன் ஒன்று சேர்ந்தால், தென்மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமியின் வெற்றியை பாதிப்படைய செய்ய முடியும். அதேநேரம், புதிய கட்சி தொடங்குவதற்கான வாய்ப்பும் குறைவு. இதே போன்று தனிப்பட்ட முறையில் மாநாடு நடத்துவது, கூட்டம் நடத்துவது வருங்காலங்களில் எடுபடாது. இன்னமும் பாஜக அவருக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. ஆனால், பாஜகவின் கணக்கு என்பது தேர்தல் கணக்குதான். ஓபிஎஸ்க்கு பெரிய அரசியல் பயணம் இருப்பதாக தெரியவில்லை" என கூறினார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற துணை நில்லுங்கள்: முதலமைச்சர் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.