சென்னை: தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பொது மக்கள் பயணச்சீட்டு வாங்க கொடுக்கும்போது, அரசுப்பேருந்து நடத்துநர்கள் வாங்க மறுப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், '10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பேருந்தில் பயணிகள் கொடுத்தால், நடத்துநர்கள் அதை மறுக்காமல் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டை வழங்க வேண்டும்.
மேலும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டவை. எனவே, அவை புழக்கத்தில் இருப்பதாலும் பேருந்து பயணிகளிடம் பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கக்கூடாது.
இதனால் நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: மின் கம்பங்களை அகற்றாமல் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்