சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்திற்குள் புகுந்த திருநங்கை ஒருவர் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது இருசக்கர வாகன சாவியை எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, காவல் நிலையத்திற்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டவர் திருநங்கை ராகினி என்பதும் பாண்டி பஜாரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து போலீசார் தொழிலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அடிக்கடி பாண்டி பஜார் காவல் நிலையத்திற்குள் புகுந்து ராகினி அராஜகம் செய்து காவலர்களை தரக்குறைவாக பேசுவதாக தெரிவித்துள்ளார்.
இதே போல அரசு வாகனங்களில் பயன்படுத்தப்படும் G என்ற நம்பர் பிளேட்டை திருநங்கை ராகினி பயன்படுத்தியதால் காவலர்கள் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு திருநங்கை ராகினி காவல் நிலையத்திற்குள் புகுந்து கல்லால் தாக்கி சாவியை எடுத்து சென்றதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சாதி ரீதியாக பேசிய பேராசிரியை மீது விசிக மீண்டும் புகார்