சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி நேற்று(டிச.31) மாலை முதல் சுமார் 16 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் மட்டும் 368 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சென்னையில் புத்தாண்டு இரவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர். அதிவேகமாக வாகனம் ஓட்டியது, சாகசத்தில் ஈடுபட்டது போன்ற வழக்குகளில் 572 இருசக்கர வாகனங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை வளசரவாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதி உயிர் இழந்துள்ளார். நேற்று இரவு மட்டும் விதிகளை மீறியதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக 694 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:New year 2023: புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்