ETV Bharat / state

உலக ஆணழகன் போட்டியில் வெல்ல ஆசை; தமிழ்நாடு அரசிடம் உதவி கோரும் போக்குவரத்து தலைமை காவலர்

உலக ஆணழகன் போட்டியில் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க விரும்பும் தனக்கு தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல் துறையும் உதவ முன்வர வேண்டுமென போக்குவரத்து தலைமைக் காவலர் புருஷோத்தமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Body builder
Body builder
author img

By

Published : Sep 5, 2021, 6:31 PM IST

சென்னை: அடையாறு போக்குவரத்து காவல் துறையில் தலைமை காவலராக பணிபுரிபவர் புருஷோத்தமன். கடந்த 2002ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்த இவர், 8 ஆண்டுகள் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் பங்கேற்று, 8 முறையும் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றவராவார். அதுமட்டுமல்லாமல் அனைத்திந்திய காவல் பணி திறனாய்வு போட்டியிலும் தமிழ்நாடு காவல் துறை சார்பாக ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் பங்கேற்ற இவர், அதில் வெற்றி பெற்றதுடன் கடந்த மாதம் 29ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டிக்கான தகுதித் தேர்விலும் தேர்வாகியுள்ளார்.

போக்குவரத்து தலைமைக் காவலர் புருஷோத்தமன்

இதன்மூலம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள உலக ஆணழகன் போட்டியில் தலைமைக் காவலரான புருஷோத்தமன் பங்கேற்கவுள்ளார்.
உலக ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் காவலர் என்ற பெருமையைப் பெற்றுள்ள புருஷோத்தமன், இதுவரை பங்கேற்றுள்ள மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் இந்தியா போன்ற போட்டிகளுக்கும் தனது உடலை மேம்படுத்தவும், அதற்கான உபகரணங்கள் வாங்கவும் ஒவ்வொரு போட்டிக்கும் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை தனது சொந்த காசைதான் செலவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்கவுள்ள தலைமைக் காவலர் புருஷோத்தமனுக்கு, உலக ஆணழகன் போட்டிக்கு செல்வதற்கான விமான டிக்கெட் செலவு, தங்குமிடம், உணவு உள்ளிட்டவைகளுக்கு என 1.5 லட்சம் ரூபாயும், போட்டிக்கு தயாராகும் செலவு சுமார் 1.5 லட்சம் ரூபாயும் என குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் பணத்தின் தேவை இருக்கிறது.
இந்த செலவுகளை போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள்தான் செய்துகொள்ள வேண்டும் எனவும், ஒன்றிய அரசு எந்த நிதியுதவியும் அளிக்காது எனவும் ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை திட்டவட்டமாக தெரிவித்துவித்துள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் உதவியை நாடியுள்ளார் தலைமைக் காவலர் புருஷோத்தமன்.
இதுவரை எல்லா போட்டிகளிலும் தனது சொந்த செலவிலேயே பங்கேற்று வென்றுள்ள நிலையில், தற்போது உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் தனக்கு உதவ முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பா. ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் புதிய திரைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.