ETV Bharat / state

கால்வாய் பணிக்காகத் தோண்டப்பட்ட குழி மூடாததால் போக்குவரத்து பாதிப்பு - இன்னல்களை கொடுத்து வரும் கால்வாய் பணி

சென்னை அருகே பல்லாவரம் சாலையில் கால்வாய் பணிக்காகத் தோண்டப்பட்ட குழியை சரியாக மூடப்படாததால் போக்குவரத்து பாதிப்பு உண்டாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பல்லாவரம் சாலைக்காக தோண்டப்பட்ட குழியை மூடாததால் போக்குவரத்து பாதிப்பு

author img

By

Published : Oct 9, 2022, 7:30 PM IST

சென்னை: பழைய பல்லாவரம், மலங்கானந்தபுரம் சாலையில் 100 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் முழுமையாக மூடப்படாமல் சேரும் சகதியுமாய் காணப்படுகிறது. இதனால், சாலையில் நடுவே இரும்பு தடுப்புகள் வைத்து தடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையின் ஒரு வழியில் மட்டும் வாகனங்கள் செல்லும் வகையில் உள்ளது. எதிர் திசையில் இருசக்கர வாகனம் மட்டும் வருவதற்கே வழி உள்ளது. ஆகையால் வாகன ஓட்டிகள், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

கால்வாய் பணிக்காகத் தோண்டப்பட்ட குழி மூடாததால் போக்குவரத்து பாதிப்பு

இந்த வழியாக சென்று கொண்டிருந்த மினி பேருந்து, சாலையை தடுக்கப்பட்டிருப்பதால் பயணிகளை முன்னதாகவே இறக்கி விட்டு செல்கின்றனர். பொதுமக்களுக்கு பெரும் இன்னல்களை கொடுத்து வரும் கால்வாய் பணிகளை சீர் செய்து சாலையை போக்குவரத்திற்கு ஏதுவாக வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க:புறம்போக்கு நிலத்தில் தோட்டம் அமைத்த காவலர் தம்பதியினர்; அதிரடியாக அகற்றிய கோட்டாட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.