ETV Bharat / state

7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @7PM

author img

By

Published : Jul 13, 2021, 7:02 PM IST

Updated : Jul 13, 2021, 7:20 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் ...

7PM
7PM

1. செப். 11இல் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

2. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?

தொடர்ந்து பத்து முறை நீட்டிக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இந்த முறையும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

3. விலையில்லா 2 ஜிபி டேட்டா திட்டம் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

அதிமுக அரசால் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா 2 ஜிபி டேட்டாவை புதுப்பித்து வழங்க வேண்டுமென சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

4. ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு

மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் குழு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் நாளை (ஜூலை 14) தனது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. 'நான் தலைமறைவாகவில்லை' - நீதிமன்ற அவதூறு வழக்கில் ஹெச். ராஜா மனு

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் பிணை கோரி ஹெச். ராஜா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தான் தலைமறைவாகவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

6. ஜாமின் கொடுத்த குஷி- சொகுசு காரில் ஊர்வலம் சென்ற ரவுடி!

ஜாமின் கிடைத்த மகிழ்ச்சியில் ரவுடி ஒருவர் சொகுசு காரில் வலம்வந்த காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

7. பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர்களுடன் 16ஆம் தேதி ஆலோசனை!

பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஜூன் 16ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

8. நீட் தேர்வு விண்ணப்ப நடைமுறைகள் தொடங்கின!

நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.

9. முதல் உலக கோப்பை நாயகன் யாஷ்பால் சர்மா காலமானார்!

1978ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் அறிமுகமானவர் யாஷ்பால் சர்மா. அந்தப் போட்டியில் 26 பந்துகளில் 11 ரன்கள் விளாசிய யாஷ்பால் சர்மா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடிக்க காரணமாக இருந்தார்.

10. #20YearsOfStalwartDHILL - கனகவேல் காக்க...

விக்ரம் நடிப்பில் உருவான ‘தில்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Last Updated : Jul 13, 2021, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.