ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5pm - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

5 மணி செய்தி
5 மணி செய்தி
author img

By

Published : Nov 9, 2020, 5:04 PM IST

1. காங்கிரசில் இணைந்தார் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்!

சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார்.

2. கரோனா தடுப்புமருந்து உற்பத்தியை தொடங்கிய ஆஸ்திரேலியா!

சிட்னி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்புமருந்தின் உற்பத்தியை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது.

3. செய்தியாளர் கொலை வழக்கு: 'எங்களைப் பற்றி செய்தி சேகரித்ததால் வெட்டிக் கொன்றோம்'

காஞ்சிபுரம்: தங்களைப் பற்றி தொடர்ந்து செய்திகளைச் சேகரித்ததால் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸை வெட்டிப் படுகொலை செய்ததாக குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார்.

4. இந்தியாவில் 29 விழுக்காடு சரிந்த மதுபான விற்பனை

டெல்லி: வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனை 29 விழுக்காடு குறைந்துள்ளதாக இந்திய மதுபான நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஐஏபிசி) தகவல் தெரிவித்துள்ளது.

5. யம்மாடியோவ்...! இத்தனை அடி நீளமான முடியா! - கின்னஸ் சாதனை படைத்த குஜராத் பெண்

அகமதாபாத்: சற்று நீளமாக முடி இருந்தாலே அதனை பராமரிக்க பெண்கள் சிரமப்படும் நிலையில், 6 அடி 7 அங்குலங்கள் முடி வளர்த்து சாதனை படைத்துள்ளார் குஜராத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர்.

6. 'ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பாஜக கண்டன பேரணி

புதுச்சேரி: 'ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பாஜகவினர் கண்டன பேரணி நடத்தினர்.

7. அர்னாப் கைது குறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சருடன் பேசிய ஆளுநர்!

உள்ளரங்க கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் அர்னாப்பின் பாதுகாப்பு, உடல்நலம் குறித்த தனது கவலையை மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அம்மாநில உள்துறை அமைச்சரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

8. தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகாது - தயாரிப்பாளர்கள் திட்டவட்டம்

சென்னை: நல்ல தீர்வு ஏற்படும் வரை புதுப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகத் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

9. யார்க்கர் நடராஜன்தான் இந்த ஐபிஎல்-ன் கண்டுபிடிப்பு: டேவிட் வார்னர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த இடதுகை பந்துவீச்சாளர் நடராஜன் தான் இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த கண்டுபிடிப்பு என ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பாராட்டியுள்ளார்.

10. ராகுல் vs தவான்; பும்ரா vs ரபாடா? ஆரஞ்சு கேப், பர்புள் கேப் யாருக்கு?

அபுதாபி: ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பர்புள் கேப், ஆரஞ்சு கேப் ஆகியவற்றை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.