ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - செய்திச் சுருக்கம்

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 2, 2021, 8:59 PM IST

தமிழ்நாட்டில் மேலும், 25,317 பேருக்கு கரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று (ஜூன்.02) மேலும் 25,317 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 வியாபாரிகளின் வாகன உரிமங்களை ரத்து செய்த மாநகராட்சி!

சில்லறை விற்பனை விலையைவிட அதிக விலைக்கு காய்கறிகளை விற்ற 4 வியாபாரிகளின் வாகன உரிமங்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

ஈஷா யோகா மையத்தின் மனுவை கிடப்பில் போட்ட நீதிமன்றம்!

தமிழ்நாட்டு கோயில்கள் குறித்து ஆய்வுநடத்த உத்தரவிடக்கோரி ஈஷா யோகா மையம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரோனா தொற்று காலத்தில் விசாரிக்க கூடிய அளவுக்கு இது அவசர வழக்கு கிடையாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

2,659 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: மாநகராட்சி சார்பில் இரண்டாயிரத்து 659 மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2ஆவது தவணை கரோனா நிதி: நாளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நாளை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கரோனாவிலிருந்து விரைந்து மீள உதவும் வேலூர் சிறப்பு சித்தா மையம்!

சிகிச்சையை பெற்றுக்கொண்டு நோயாளிகள் வெளியே செல்லும்போது முழுமையான சித்த மருத்துவ அறிவியலைப் பெற்று வெளியே செல்கின்றனர் என்பதுதான் வேலூர் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் சிறப்பு!

மேட்டூர் அணை நீர் செல்ல தூர்வாரும் பணிகள் தொடக்கம்: விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர்: 20.5 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 169 கிலோ மீட்டர் தூரத்திற்குத் தொடங்கியுள்ள தூர்வாரும் பணிகள் ஜூன் 15ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என தூர்வாரும் பணிகள் கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் கூறியுள்ளார்.

இந்தியாவில் 1.64 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு

இந்தியாவிலுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1.64 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

'தெலங்கானா கடின உழைப்பாளிகள் நிறைந்த மாநிலம்' - பிரதமர் வாழ்த்து

தெலங்கானா மாநில நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் மங்களநாத குருக்கள் இறந்து விட்டதாகக் கூறி இணைத்தில் பணவசூல்: மோசடி ஆசாமிகள் மீது புகார்

சென்னை: உயிருடன் இருக்கும் தன்னையும், தன் குடும்பத்தாரையும் இறந்து விட்டதாகக் கூறி அடக்கம் செய்ய பணம் வசூல் செய்தவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த மங்களநாத குருக்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.