ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 PM

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 12, 2021, 7:04 PM IST

1. குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு

குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் காட்லோடியா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆவார். முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி நேற்று பதவியை ராஜினாமா செய்த நிலையில், பூபேந்திர படேல் புதிய முதலமைச்சராகத் தேர்வாகியுள்ளார்.

2. வைரலாகும் வடிவேலுவின் பிறந்தநாள் புகைப்படம்!

நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3. பி.எட் பட்டப்படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் பி.எட் பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

4. மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

5. நான்கு மாவட்டங்களில் தொடரும் மேற்பட்ட கரோனா பாதிப்பு

சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 100க்கு மேல் பாதிப்பு தொடர்கிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

6. லாபம்: பொதுவுடைமைச் சமுதாயம் தொலைந்து போகவில்ல...

‘லாபம்’ திரைப்படத்தை பார்க்கும் முன்பு ஜனநாயகம் எனும் பெயரில் மக்கள் மீது நிகழ்த்தப்படும் மறைமுக வன்முறை குறித்த புரிதல் நமக்கு அவசியமாகிறது. உலகமயமாதல் குறித்த புரிதல் வந்த பின்பு ‘கற்றது தமிழ்’ படத்தை பலரும் கொண்டாடியதுபோல், இத்திரைப்படமும் மக்களால் கொண்டாடப்படும். ஜனநாதன் தனது கடைசி படத்திலும் உழைக்கும் மக்களின் குரலாகவே ஒலித்திருக்கிறார்.

7. 4 நிமிட தாமதம் - நீட் தேர்வு எழுத அனுமதிக்காத அலுவலர்

சென்னை மயிலாப்பூரிலுள்ள பிஎஸ் சீனியர் செகன்ட்ரி கௌரி மையத்திற்கு நான்கு நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவரை தேர்வு எழுத அலுவலர்கள் அனுமதிக்காத விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

8. நீட் : மகளின் தலையில் ரப்பர்பேண்டை வாயால் அகற்றிய தந்தை

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று (செப்.12) நடைபெற்று வருகிறது.இந்நிலையில், சென்னை மயிலாப்பூரிலுள்ள பிஎஸ் சீனியர் செகன்ட்ரி கௌரி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள் அனைவரும் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளையும், காதில் அணிந்த கம்மலையும், ரப்பர் பேண்ட் போன்ற பொருட்களையும் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.அப்போது, மாணவி ஒருவரின் தலையில் ரப்பர்பேண்டில் உலோகம் கலந்த இருந்ததால் அதனை அவரது தந்தை மாணவர்களின் பெற்றோர்களுக்கு மத்தியில் பல்லால் கடித்து அகற்றியது காண்போரை கலங்க செய்தது.

9. 'விடியல் அரசின் வாய்ச்சவடாலால் மாணவன் தற்கொலை'

தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று பொய் வாக்குறுதி கூறிய திமுக அரசின் வாய்ச்சவடாலால் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

10. வேலையில்லா திண்டாட்டம் குறித்து மோடி அரசை சாடிய ராகுல் காந்தி

நாட்டில் நிலவும் வேலையின்மை குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.