ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

author img

By

Published : Apr 14, 2021, 7:01 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

1. எங்க அய்யா அம்பேத்கருக்கு நீ என்ன... விரட்டியடிக்கப்பட்ட பாஜகவினர்!

இரண்டு கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவியது. ஒரு கட்டத்துக்குப் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பாஜகவினரை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் தல்லாகுளம் செக்போஸ்ட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

2. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3. திமுக பொருளாளர் டிஆர் பாலுவிற்கு கரோனா உறுதி

கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவு கூர்ந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

4. மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு

சென்னை: அண்ணா நகரில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5. சிபிஎஸ்ஐ பொதுத் தேர்வு ஒத்திவைப்பு - கல்வியாளர்கள் வரவேற்பு!

சிபிஎஸ்இ, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்தும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

6. தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு - புரட்சி கவிஞர்

பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

7. ’தமிழ்நாட்டிற்கு 54.85 லட்சம் கரோனா தடுப்பூசி வந்துள்ளது’ - ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டிற்கு இதுவரை 54.85 லட்சம் கரோனா தடுப்பூசி வந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

8. மானிய விலை உரங்கள் பதுக்கி வைத்து விற்பனை!

நீலகிரி: மானிய விலை உரங்கள் தனியார் உரக்கடைகளில் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

9. IPL 2021 SRH vs RCB : வெற்றிநடையைத் தொடருமா கோலியின் படை?

ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று (ஏப்.14) பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

10. வெற்றிமாறனின் சினிமா பயிற்சி வகுப்பு - ஏழை மாணவர்களுக்கு உதவி!

சென்னை: ஏழை, எளிய மாணவர்கள், சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச சினிமா பயிற்சி வகுப்பை இயக்குநர் வெற்றிமாறன் தொடங்கியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.