ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM

author img

By

Published : Aug 25, 2021, 6:59 AM IST

Updated : Aug 25, 2021, 7:46 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top-10-news-at-7-am
top-10-news-at-7-am

1. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இரும்பு உருக்காலை தடயங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டையில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இரும்பு உருக்கு ஆலை தடயங்களை இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

2. பெற்றோர்களுக்கு கரோனா விழிப்புணர்வு அவசியம் - ரயில்வே காவல் துறை அறிவுரை

கரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் போதிய விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும் என ரயில்வே காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

3. 18 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட அப்துல் கலாம் தேசிய நினைவகம்

ராமநாதபுரத்தில் 18 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் நேற்று (ஆக. 24) ஆர்வமுடன் பார்வையிட்டுச் சென்றனர்.

4. தமிழ்நாட்டில் புதிதாக 1,585 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 585 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

5. எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்ற சூழலில் வாழும் மக்கள்

ஆலைகள் வெளியேற்றும் கழிவுகளால் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக எண்ணூர் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

6. கே.டி. ராகவன் விவகாரம் - என்ன நடக்கிறது பாஜகவில்?

பாஜகவின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் வீடியோ விவகாரம் அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது.

7. பெண்ணை ஏமாற்றிய வழக்கு: ஆர்யா போல் பேசியதாக இருவர் கைது!

புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது ஹர்மான், அவரது மைத்துனர் முகமது ஹுசைனி ஆகியோர்தான் ஆர்யா போல் பேசி ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண்ணை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

8. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடலில் நீராட பக்தர்களுக்கு அனுமதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நான்கு மாதங்களுக்குப் பிறகு கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

9. போலி சான்றிதழ் வழங்கி சுகாதாரப் பணியில் சேர்ந்தவர்கள் மீது புகார்

திருவண்ணாமலையில் போலி சான்றிதழ் கொடுத்து சுகாதாரப் பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சுகாதாரத் துணை இயக்குநர் புகார் அளித்துள்ளார்.

10. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் என்னால் பங்கேற்க முடியாது - பஜ்ரங் புனியா திட்டவட்டம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

Last Updated : Aug 25, 2021, 7:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.