ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - TOP 10 NEWS

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்

TOP 10 NEWS @ 7 AM
TOP 10 NEWS @ 7 AM
author img

By

Published : Aug 18, 2021, 7:05 AM IST

உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு - மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவு

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியர்களின் பாதுகாப்புக்கு உறுதியளித்துள்ள தாலிபன்கள் - சீக்கியத் தலைவர்

காபூலில் உள்ள சீக்கியத் தலைவர்களைச் சந்தித்து தாலிபன்கள், இந்தியர்களின் பாதுகாப்பு உறுதியளித்துள்ளதாக டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

கோடநாடு கொலை வழக்கு: விசாரணையில் எடப்பாடி பழனிசாமி குறித்து சயான் பேசியதாகத் தகவல்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் நிபந்தனை பிணையில் உள்ள சயானிடம் காவல் துறை மூன்று மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், அந்தச் சம்பவத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்குத் தொடர்பிருப்பதாக சயான் விசாரணை அலுவலர்களிடம் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

3ஆவது அலை வந்தாலும் சமாளிக்க அரசு தயார் - மா. சுப்பிரமணியன்

மூன்றாவது அலை வந்தாலும் அதனைச் சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளதாகவும், ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாகவும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

காலணி தைப்பவரின் மகனான என்னை அமைச்சராக்கியது மோடிதான் - எல். முருகன் உருக்கம்

பட்டியலினத்தைச் சேர்ந்த என்னை மத்திய இணை அமைச்சராக்கியது பிரதமர் நரேந்திர மோடிதான் என எல். முருகன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கீற்றுக் கொட்டகையில் குடியிருப்பவர் ஒருவர்கூட அகற்றப்படவில்லை - சேகர்பாபு

கோயில் நிலத்தில் கீற்றுக் கொட்டகையில் குடியிருப்பவர் ஒருவர்கூட அகற்றப்படவில்லை என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது தெரிவித்தார்.

தாய்லாந்துக்கு கடத்தவிருந்த 2,500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

சென்னையிலிருந்து சரக்கு விமானத்தில் தாய்லாந்திற்கு கடத்த முயன்ற 25 லட்சம் ரூபாய் மதிப்புடைய 2,500 நட்சத்திர ஆமைகளை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 18

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைக் காண்போம்.

மாரியப்பன் மீண்டும் தங்கம் வெல்வார் - தாயார் சரோஜா நம்பிக்கை

பாரா ஒலிம்பிக்கில் இந்த முறையும் மாரியப்பன் தங்கம் வெல்வார் என்று பிரதமர் மோடி உடனான கலந்துரையாடலுக்குப்பின், அவரின் தாயார் சரோஜா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இருள் அரசன் ஒடியனின் திகில் சம்பவங்கள்... மிரட்ட வரும் 'கருவு'

முற்றிலும் புது முகங்களால் உருவாக்கப்பட்டுள்ள கருவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.