1. நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து வழக்கு
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் வெற்றிபெற்றதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தாக்கல்செய்துள்ளார்.
2. பேரவையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் குறித்து விவாதம்
நிலுவையிலுள்ள வழக்குகளைச் சட்டப்பேரவையில் பேசக் கூடாது என்றாலும், பெயர் குறிப்பிடாமல் வழக்கின் தன்மையைக் குறித்துப் பேசுவதற்கு உரிமை உண்டு. இந்த விவாதத்தை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை என்ற சட்டப்பேரவை முன்னவர் துரைமுருகனின் வாதத்தை துணை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.
3. ’தனிநபர்கள், நிறுவனங்களிடம் ரூ.3.79 கோடி அபராதம் வசூல்’ - சென்னை மாநகராட்சி
கரோனா தடுப்பு, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத தனிநபர்கள், நிறுவனங்களிடமிருந்து, கடந்த ஏப்ரல் 9 முதல் நேற்றுவரை மூன்று கோடியே 79 லட்சம் ரூபாய் அபராதமாக வசூல்செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
4. மாணவியருக்கு நாப்கின் இயந்திரம், பள்ளிகளுக்கு கட்டடங்கள் அமைக்க ஜோதிமணி கோரிக்கை!
82 பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டடம் தேவை என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
5. 20 ஆண்டுகளுக்குப் பின் தாலிபன்களிடம் வீழ்ந்த ஆப்கானிஸ்தான்!
இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்க ஆதரவிலான அதிபர் அஷ்ரப் கானியின் 20 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து விவரிக்கிறார் ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் பிலால் பட்.
6. ஆப்கான் போர்: இந்தியாவின் வணிகத்தில் பாதிப்புகள் என்ன?
ஆப்கான் தலைநகர் காபூலை தாலிபன்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான வணிகம் பெரும் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
7.தற்காலிக பாலம் அமைத்து சடலத்தை கொண்டுசெல்லும் நிலையில் மக்கள்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாணார்பதி பகுதியில் இறந்தவரின் உடலைப் புதைக்க பாதை இல்லாததால் தற்காலிகமாக கழிவுநீர் செல்லும் கீரிபள்ளம் ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
8. இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 17
நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைக் காண்போம்.
9.ENG vs IND: லண்டன் தாதா கோலி; லார்ட்ஸில் வென்றது இந்தியா!
இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஏழு ஆண்டுகளுக்கு பின் லார்ட்ஸ் மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
10.வலிமை ரிலீஸ் எப்போது?
அஜித்தின் 'வலிமை' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனக்கூறி, 'தல' தீபாவளி எனும் ஹேஷ்டேக்கை உருவாக்கி, அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.