ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top-10-news-at-7-am
top-10-news-at-7-am
author img

By

Published : Aug 13, 2021, 7:02 AM IST

தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பட்ஜெட் இன்று தாக்கல்!

தமிழ்நாடு பட்ஜெட் (வரவு-செலவுத் திட்ட அறிக்கை) வரலாற்றில் முதன்முறையாக இன்று (ஆகஸ்ட் 13) காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கை தாக்கல்செய்யப்படுகிறது. இதனை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்செய்கிறார்.

நகைக் கடைகளில் மணப்பெண் படத்தைத் தவிருங்கள்- கை கூப்பும் கவர்னர்!

நகைக் கடைகளில் மணப்பெண் அலங்கார புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

150-க்கும் மேற்பட்ட புகார்கள்... 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை - இது பப்ஜி மதனின் லீலைகள்!

மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக ஆயிரத்து 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர்.

மேகதாது விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஷெகாவத் கருத்துக்கு பி.ஆர். பாண்டியன் கண்டனம்

குடிநீருக்கு அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்த ஆதாரம் இருந்தால், மேகதாதுவிற்கு அனுமதி தர தயார் என மத்திய அமைச்சர் ஷெகாவத்தின் கருத்துக்கு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்பில் சேர 1,43,080 மாணவர்கள் பதிவு

பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு இதுவரை 1 லட்சத்து 43 ஆயிரத்து 80 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த யோகா ஆசிரியை புதிய உலக சாதனை!

கர்ண பத்மாசனத்தில் தொடர்ந்து 10 நிமிடங்கள் நின்று யோகா ஆசிரியை புதிய உலக சாதனை படைத்து இந்தியா புக் ஆப் ரெக்கார்டு மற்றும் நோபல் உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தார்.

ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி

பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இணையதளம் வழியாக மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ENG vs IND: ஏழு ஆண்டுகள் கழித்து லார்ட்ஸில் சதம்; ராகுல் அசத்தல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கே.எல். ராகுல் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களைச் சேர்த்துள்ளது.

ஈட்டி எறிதல் தரவரிசை: தங்கத்திற்குப் பிறகு இரண்டாவது இடத்தில் நீரஜ்!

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பட்டியலின அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜர் ஆகாத நடிகை மீரா மிதுன்!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சென்னை சைபர் கிரைம் காவல் துறையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், நேற்று நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.