ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

author img

By

Published : Jan 29, 2021, 7:00 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்

1 விரைவில் 5ஜி சேவை - மத்திய அமைச்சர் ரவிசங்கர் உறுதி!

இந்தியாவில் விரைவில் 5ஜி அலைக்கற்றையின் முழு பயன்பாட்டிற்கான சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

2 மகளுக்கு வினையான தாயின் இரண்டாவது கணவர் - சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

தாயின் இரண்டாவது கணவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 13 வயது சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியை எச்.ஐ.வி தொற்று பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

3 சிறு, குறு தொழிலை மேம்படுத்த முக்கிய நகரங்களில் ரயில்களை நிறுத்த ஏற்பாடு!

சிறு தொழில் முனைவோர்களுக்கு வசதியாக, அவர்களது வணிக பொருள்களை அனுப்புவதற்கு முக்கிய தொழில் நகரங்களில் மதுரையிலிருந்து கிளம்பும் விரைவு ரயில்கள் 5 நிமிடம் நிறுத்தப்படும் எனத் தென்னக ரயில்வேவின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

4 தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்த வலியுறுத்தல்!

ஆறு மாநிலங்களில் கடந்த 13 நாட்களில் வெறும் 21 விழுக்காடு அளவு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே, அந்த மாநிலங்கள் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

5 போதுமான எண்ணிக்கையிலான ஆதார் மையங்கள் உள்ளதா? - திருப்பூரில் ஓர் கள ஆய்வு!

திருப்பூர்: ஆதார் ஒவ்வொரு உத்தியோகப்பூர்வ பரிவர்த்தனைக்கும் முதன்மை ஆவணமாக மாறியுள்ளது. எந்த ஒரு அரசாங்கத் திட்டத்திற்கும் முதன்மை ஆவணமாக, இந்த ஆதார் பார்க்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் ஆதார் மையங்கள் குறித்த ஒரு பார்வை...

6 கோரிக்கைகளை நிறைவேற்ற அறவழி போராட்டம் - செவிலியர்களுக்கு அழைப்பு!

பல்வேறு கட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் அறவழி போராட்டத்தில் கலந்துகொள்ள, அவர்களின் மாநில சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, யாரையும் பாதிக்காத வகையில் கறுப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

7 ஈழத்து எழுத்துலக ஆளுமை டொமினிக் ஜீவா காலமானார்

ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக் ஜீவா காலமானார்.

8 நடப்பு மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், இந்தியாவில் சற்று தணிந்து இருந்தாலும், அதனைத் தொடர்ந்து கட்டுப்படுத்துவதற்கு அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

9 முதலமைச்சர் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் - ஆர்.எஸ். பாரதி

ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த இடத்தில் நினைவிடம் கட்டக் கூடாது என்று பினாமிகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர் ஸ்டாலின் எனும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை முதலமைச்சர் பேசியிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

10 டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ரபாடா!

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.