1. 14 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
2. கராத்தே சாகசம் செய்த மாணவர் தீயில் கருகிய சோகம்!
கராத்தே மாணவர் சாகசம் செய்யும்போது, உடலில் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
3. குளத்தை காணவில்லை - மீட்டு தரக்கோரி ஊர் மக்கள் புகார்
பட்டுக்கோட்டையில் 100 ஏக்கர் விளைநிலங்களுக்கு நீராதாரமாக விளங்கும் நொச்சிகுளத்தினை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.
4. ராஜிவ் காந்தி பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தியின் 77ஆவது பிறந்தநாளை இன்று (ஆக. 20) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில், மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர்.
5. கோயிலில் நடந்த திருமணங்கள் - கூட்ட நெரிசலில் இரு வீட்டார் மோதல்
குன்றத்தூர் முருகன் கோயிலில் நடந்த திருமணங்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இரு திருமண வீட்டாரும் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர்.
6. மகப்பேறு விடுப்பில் பாகுபாடு கூடாது - நீதிமன்றம் அறிவுறுத்தல்
மகப்பேறு விடுப்பு வழங்கும்போது பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
7. மீண்டும் இயங்குமா குன்னூர் மணிக்கூண்டு?
குன்னூரின் அடையாளமாக விளங்கும், செயலிழந்து நிற்கும் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட மணிக்கூண்டை மீண்டும் இயங்கச் செய்து முறையாக பராமரிக்க, நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8. சாதி மறுப்பு திருமணம் - மிரட்டும் பெற்றோர் மீது புகார்
கரூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த தங்களை தனது பெற்றோர் மிரட்டுவதாக கூறி புதுமண பெண், தனது கணவருடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
9. 'மருத்துவத் துறை பணி நியமனத்தில் விளையாட்டு, கலாசார இடஒதுக்கீடு வேண்டும்' - அன்புமணி ராமதாஸ் கடிதம்
தமிழ்நாட்டில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் மருத்துவத் துறை சார்ந்த அனைத்து பணிகளிலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், கலாசாரம் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10. தொழில்நுட்ப கருவிகளில் மோசடி: தூசி தட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை
தமிழ்நாடு காவல் துறையில் தொழில்நுட்ப கருவிகள் வாங்கியதில் பலகோடி ரூபாய் முறைகேடு தொடர்பான வழக்கில், ஓராண்டிற்கு பிறகு முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.