ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5PM - 65 லட்சம் பேருக்கு தடுப்பூசி

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம் இதோ..

Top 10 News @ 5 PM
5 மணி செய்தி சுருக்கம்
author img

By

Published : Feb 10, 2021, 4:59 PM IST

மினி கிளினிக்கில் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டார்கள்!

அம்மா மினி கிளினிக்கில் நியமனம் செய்யப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் எந்த காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள் என்ற அறிவிப்புடன், அதற்கான ஆட்கள் தேர்வு செய்யும் பணிகள் சுகாதாரத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது.

'மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றம் வரும்' - மு.க.ஸ்டாலின்

சென்னை: இன்னும் 3 மாதங்களில் தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றம் வரப்போகிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

’பழனிசாமி- சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடக்காது’: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடைபெறாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

முன்னாள் கேரள உள்துறை அமைச்சர் மகன் மீது 104 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

போதைப் பொருள், சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்குகளில் முன்னாள் கேரள உள்துறை அமைச்சரின் மகன் பினிஸ் கோடியேரி மீது 104 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசு பரிந்துரை: 500 கணக்குகளை நிரந்தரமாக முடக்கிய ட்விட்டர்!

மத்திய அரசின் கோரிக்கைகளை ஏற்று, விதிகளை மீறிய 500க்கும் மேற்பட்ட கணக்குகளை நிரந்தரமாக ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

65 லட்சம் பேருக்கு தடுப்பூசி; 97% பேருக்கு முழு திருப்தி-மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்

நாடு முழுவதும் சுமார் 65 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 97 விழுக்காட்டினர் முழு திருப்தியை தெரிவித்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் வெள்ளம்: தொலைந்துபோன அமெரிக்க அணு கருவி காரணமா?

உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பிற்கு 1965ஆம் ஆண்டில் புதைக்கப்பட்ட அமெரிக்க அணு கருவி காரணமாக இருக்கலாம் என்ற சுவாரஸியமான சாத்தியக்கூறை விளக்குகிறார் ஈடிவி பாரத்தின் மூத்த நிருபர் சஞ்சீப் பருவா.

9 மாதங்களாகியும் உடற்கூராய்வு அறிக்கை வரவில்லை - ஜெயராஜ் மகள் வேதனை

திருநெல்வேலி: சாத்தான்குளத்தில் காவல் துறை விசாரணையில் தந்தை மற்றும் சகோதரன் உயிரிழந்து 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் உடற்கூறாய்வு முடிவுகள் வழங்கப்படவில்லை என ஜெயராஜ் மகள் பெர்சி வருத்தம் தெரிவித்தார்.

ராமர் அவதாரம் எடுக்கும் மகேஷ் பாபு!

3டி பாணியில் உருவாகும் ராமாயணம் படத்தில் சீதையாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ள நிலையில், ராமர் வேடத்தில் நடிப்பதற்கு மகேஷ் பாபுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நடைபாதைகளை ஆக்கிரமித்திருக்கும் அதிமுக பேனர்கள்: இன்னும் உயிர் பலிகள் வேண்டும்?

திருப்பூர்: தேர்தல் சுற்று பயணத்திற்காக வரும் முதலமைச்சரை வரவேற்று நடைபாதையை ஆக்கிரமித்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.