ETV Bharat / state

மாலை 3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கம்.

மாலை 3 மணி செய்திச் சுருக்கம்
மாலை 3 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Dec 10, 2020, 3:03 PM IST

'சித்ரா தற்கொலை தான் செய்துகொண்டார்'- போலீஸ் தகவல்!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் சுங்கக் கட்டணம்: போராட்டத்தை அறிவித்த திமுக

சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சுங்க கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து திமுக சார்பில் நாளை மாபெரும் ஆர்பாட்டம் நடைபெறும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

'தேசிய நெடுஞ்சாலைகளில் பேரிகார்டு அமைப்பதில் தனியார் விளம்பரங்களை அனுமதிப்பது ஏன்?'

மதுரை: தேசிய நெடுஞ்சாலைகளில் பேரிகார்டு அமைப்பதில் தனியார் விளம்பரங்களை அனுமதிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல்செய்திட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பிரியாணிக் கடை உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: தப்பியோடிய கும்பலுக்கு வலைவீச்சு

சென்னை: பல்லாவரத்தில் பிரியாணிக் கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய கும்பலை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தெரிவிக்கும் விடுதலைச் சிறுத்தைகள்

புதுச்சேரி: சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகையை மீண்டும் வழங்க வலியுறுத்தி புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதறிஞருக்கு மரியாதை செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

டெல்லி: மூதறிஞர் ராஜாஜியின் 142ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் புகைப்படத்திற்கு மக்களவை சபாநாயகர், எம்பிக்கள் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

தரையிறங்கும்போது வெடித்து சிதறிய ராக்கெட்... வாழ்த்து தெரிவித்த எலான் மஸ்க்

வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஆளில்லா சோதனை ராக்கெட் தரையிறங்கியபோது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இருப்பினும், முயற்சியை பாராட்டுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளது.

இன்னும் சில வாரங்களில் தடுப்பு மருந்து வழங்கும் பணியை தொடங்கும் இஸ்ரேல்!

அபுதாபி: இஸ்ரேல் நாட்டிலுள்ள மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணி, இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

சாம்சங் அறிமுகப்படுத்திய பிரமாண்ட டிவி!

சியோல்: சாம்சங் நிறுவனத்தின் அடுத்த கண்டுபிடிப்பாக 110 இஞ்ச் மைக்ரோ எல்ஈடி டிவியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

விஜயின் அடுத்த படத் தலைப்பு லீக் ஆனதா?

நடிகர் விஜயின் அடுத்த படத் தலைப்பு 'டார்கெட் ராஜா' என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.