ETV Bharat / state

மதியம் 3 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

author img

By

Published : Sep 26, 2021, 3:20 PM IST

ஈடிவி பாரத்தில் மதியம் 3 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-3-pm
top-10-news-at-3-pm

1. கோவிட்-19 - இந்தியாவில் புதிதாக 28,326 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2. 'திமுக மக்களை ஏமாற்றுகிறது' - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 எனப் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து திமுக பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றஞ்சாட்டினார்.

3. பெண் காவல் ஆய்வாளரை மிரட்டும் பாமக எம்.எல்.ஏ. அருள்!

சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் இரா. அருள், பெண் காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4. யுபிஎஸ்சி தேர்வில் மாற்றுத்திறனாளி தேர்ச்சி - கௌரவித்த அமைச்சர்

யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 750ஆவது இடம் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவர் ரஞ்சித்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

5. மாசடையும் காவிரி ஆறு - கண்டுகொள்ளாத அலுவலர்கள்

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக சாய துணிகளை அலசி ஆற்றை மாசுபடுத்துகின்றனர்.
6. சுகாதாரத் துறையை மேம்படுத்த போர்க்கால நடவடிக்கை தேவை - வெங்கையா நாயுடு

நாட்டின் சுகாதாரத் துறை தேவையை நிறைவேற்ற அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

7. காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - மூன்று ராணுவ வீரர்கள் காயம்

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்க முயன்றபோது மூன்று ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

8.நக்சல் பாதித்த மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பத்து மாநில முதலமைச்சர்களுடன் ஒன்றிய உள்துறை அமித் ஷா ஆலோசனை மேற்கொள்கிறார்.

9.பேக்கரி ஊழியர் வெட்டி கொலை

கமுதி அருகே பேக்கரி ஊழியரை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

10.வாலை சுருட்டு... இன்று மாலை ருத்ர தாண்டவம் லிரிக் வீடியோ

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் வாலை சுருட்டு பாடல் லிரிக் வீடியோ இன்று மாலை வெளியாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.