ETV Bharat / state

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 3 PM

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்...

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 29, 2021, 3:18 PM IST

1. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி: மேற்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வட தமிழ்நாட்டையொட்டி ஆந்திரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, தென்மேற்குப் பருவ காற்று ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2. மதுரை பாலம் கட்டுமான விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு!

மதுரை பாலம் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக அத்திட்டத்தின் பொறுப்பாளர், பொறியாளர், ஹைட்ராலிக் ஒப்பந்ததாரர் உள்ளிட்ட மூவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

3. பெற்ற தாயின் உதவியுடன் மகள் உள்பட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... சென்னையில் கொடூரம்!சென்னை டிபி சத்திரத்தில் ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கூல் ட்ரிங்ஸ் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

4. மணமகன் வாயில் குட்கா - பளார் விட்ட மணமகள்

திருமண சடங்கின் போது, குட்காவை மென்ற மணமகனை, மணமகள் கன்னத்தில் அறைந்தது சமூக வலைதளத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

5. 'அவசர அவசரமாக பள்ளிகளைத் திறக்க வேண்டாம்' - எய்ம்ஸ் பேராசிரியர்

கரோனா முழுமையாக குறையாத சூழ்நிலையில், பள்ளிகளைத் திறப்பதில் அரசு நிதானம் காட்ட வேண்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் நவீத் விக் கேட்டுக்கொண்டுள்ளார்.

6. ஆசிரியர்கள் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தினாலும் பணிக்கு வரலாம் - அமைச்சர் தகவல்

பள்ளி, கல்லூரிகள் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திறக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலே பணிக்கு வரலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

7. ஆறு மணி நேரத்தில் புகழ் வென்ற ஆறு லட்சம்

குக் வித் கோமாளி புகழ் 6 மணி நேரம் சிரிக்காமல் இருந்து 6 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.

8. சர்வதேச விமான சேவை தடை நீட்டிப்பு!

கரோனா பரவலின் எதிரொலியாக, சர்வதேச விமான சேவைகளுக்கான தடையை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

9. கஞ்சா விற்பனை கும்பல் தலைவன் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை

புதுச்சேரிக்கு கஞ்சா விநியோகம் செய்த ஆந்திராவைச் சேர்ந்த கஞ்சா கும்பல் தலைவனை நக்சல் பகுதியில் தனிப்படை காவல் துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

10. பாரா ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் - தலைவர்கள் வாழ்த்து!

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவினாபென் படேலுக்கு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.