ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 3 pm
Top 10 news @ 3 pm
author img

By

Published : Sep 30, 2020, 3:16 PM IST

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

குமரியில் சிக்கிய குழந்தைக் கடத்தல் கும்பல்!

குழந்தைகளை கடத்தி வந்த தம்பதி தமிழ்நாடு - கேரள எல்லையான களியக்காவிளையில் சிக்கினர். அவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர்: பிரதமருக்கு பதிலளித்து யோகி ட்வீட்!

தலித் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அக்குற்றவாளிகள் அனைவரும் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர் என யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்துள்ளார்.

தனியார் பங்களிப்புடன் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - முதலமைச்சர் தொடங்கிவைப்பு

செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

நாட்டில் சராசரியாக நாளொன்றுக்கு 87 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு

நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 7.3 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலுக்கு எதிர்ப்பு: காங்கிரஸார் தூக்கு மாட்டிக் கொண்டு போராட்டம்

கோவில்பட்டியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை ரத்து செய்ய வலியுறுத்தி தூக்கு மாட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மரவள்ளிக் கிழங்கு மாவு மில்லில் தீ விபத்து: ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

மரவள்ளிக் கிழங்கு மாவு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

பழமை வாய்ந்த இரண்டு மில்கள் மூடப்பட்டன

பழமை வாய்ந்த சுதேசி, பாரதி இரண்டு மில்களும் இன்று(செப் .30) முதல் மூடப்படும் அரசு அறிவித்துள்ளது.

சிபிராஜின் 'கபடதாரி' படப்பிடிப்பு நிறைவு

சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'கபடதாரி' படத்தின் படப்படிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

நான் எந்த தீய பழக்கங்களும் இல்லாத நபர் - ரகுல் ப்ரீத் சிங்

தான் புகை பிடிக்காத எந்த தீய பழக்கங்களும் இல்லாத நபர் என நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.