ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 3 PM

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்தி சுருக்கம்

3 pm news
3 pm news
author img

By

Published : Feb 13, 2021, 3:18 PM IST

2ஆவது டெஸ்ட்: சதமடித்து அசத்திய ரோஹித்; வலிமையான நிலையில் இந்தியா!

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்துள்ளது.

கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

மதுரை: கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

2ம் தவணை தடுப்பூசி கட்டாயம்!

சென்னை: முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் முடிந்தவர்கள் தவறாமல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையை கோவிட் தடுக்கவில்லை- நிர்மலா சீதாராமன்!

மத்திய அரசு எடுத்துவரும் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையை கோவிட் பெருந்தொற்று தடுக்கவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பட்டியலின மக்கள் இஸ்லாம், கிறிஸ்தவம் மாறினால் சலுகை கிடையாது!

பட்டியலின மக்கள் இஸ்லாம், கிறிஸ்தவம் மாறினால் இடஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தமிழக அரசின் ’1100’ சேவை இன்று முதல் தொடக்கம்!

சென்னை: தமிழக அரசின் உதவியை பெற ’1100’ சேவை எண் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

பாலு மகேந்திரா - கண்களில் காடு வைத்திருந்தவர்...

இவ்வளவுதான் வாழ்க்கை என மனதை தேற்றிக்கொண்டு கடந்துபோக கற்றுக் கொடுப்பதுதான் மூன்றாம் பிறையின் க்ளைமேக்ஸ். இன்றுவரை அந்த க்ளைமேக்ஸ் ஒரு ட்ரெண்ட் செட்டர்.

செர்பியா, ரஷ்யா, உக்ரைன் நாடுகளுடன் இந்திய மகளீர் கால்பந்து அணி விளையாடுகிறது!

கரோனா அச்சுறுத்தலுக்கு பின் செர்பியா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுடன் சர்வதேச நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாட இந்திய மகளீர் கால்பந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

கோவிட் பாதிப்பு; பழ நெடுமாறன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்

சென்னை: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ நெடுமாறனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'வாழும் புரட்சி தலைவரே' எம்ஜிஆர் கெட்அப்பில் இபிஎஸ் - கட்அவுட்டால் பரபரப்பு!

கரூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எம்ஜிஆர் போல் சித்தரித்து 'வாழும் புரட்சி தலைவரே' என்ற வாசகங்களுடன் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.