ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

author img

By

Published : Oct 2, 2020, 12:54 PM IST

1.அக். 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வர அக்கட்சி தலைமை உத்தரவு!

அக். 7ஆம் தேதி அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அக் 6ஆம் தேதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் சென்னை வர அக்கட்சியின் தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

2. காந்தி பிறந்தநாள்: குடியரசு தலைவர், பிரதமரின் செய்தி

அண்ணல் காந்தியடிகளின் 151ஆவது பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி செய்திகளை பகிர்ந்துள்ளனர்.

3. 'விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்'- அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: அணைகளில் தண்ணீர் கூடுதலாக இருப்பதால் மக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

4. சிகிச்சையில் நல்ல முன்னேற்றம்: வீடு திரும்பும் விஜயகாந்த், பிரேமலதா!

சென்னை: தேமுதிக நிறுவனரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இன்று (அக். 2) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

5.காந்தி ஜெயந்தி: ஒன்றிணைந்து மரியாதை செய்த செலுத்திய ஈபிஎஸ், ஓபிஎஸ்

சென்னை: அண்ணல் காந்தியடிகளின் 151ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.

6.பூரி கடற்கரையில் அண்ணல் காந்தியடிகளின் மணற்சிற்பம்....!

அண்ணல் காந்தியடிகளின் 151ஆவது பிறந்தநாள் விழா இன்று (அக். 2) கொண்டாடப்படுவதை ஒட்டி, நாட்டின் முக்கியத் தலைவர்கள், மக்கள் நினைவுகூர்ந்துவருகின்றனர். அந்தவகையில், ஓடிசாவைச் சேர்ந்த பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணலால் அண்ணல் காந்தியடிகளை சிற்பமாக செதுக்கியுள்ளார்.

7.கோவிட் - 19: ஒரே நாளில் 81 ஆயிரம் பேர் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81 ஆயிரத்து 484 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதன்மூலம் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 64 லட்சத்தைத் நெருங்கியுள்ளது.

8.'விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்'- அமைச்சர் செங்கோட்டையன்

9. அமித்ஷாவை விஞ்சிவிட்டார் யோகி! - எஸ்.டி.பி.ஐ. கட்சி விமர்சனம்..!

சென்னை: அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதிலும், ஜனநாயகத்தை படுகொலை செய்வதிலும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அமித்ஷாவை விஞ்சிவிட்டதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஜி தெரிவித்துள்ளார்.

10.சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா!

சென்னை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.