ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-1pm
top-10-news-at-1pm
author img

By

Published : Jul 3, 2020, 1:01 PM IST

சாத்தான்குளம் விவகாரம்: யாரும் அப்ரூவராக மாற வில்லை - சிபிசிஐடி ஐஜி சங்கர் தகவல்

சாத்தான்குளம் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையில் 5 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் காவலர் முத்துராஜை தவிர 4 பேரை கைது செய்துள்ளோம். தலைமறைவாகியுள்ள முத்துராஜை இரண்டு, மூன்று நாட்களில் கைது செய்வோம் என சிபிசிஐடி ஐஜி சங்கர் தகவல் தெரிவித்தார்.

லடாக் எல்லைப் பகுதிக்கு பிரதமர் மோடி திடீர் பயணம்

இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் லடாக்கில் உள்ள லே எல்லைப்பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் பயணம் மேற்கொண்டார்.

ஜம்மு காஷ்மீர், என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுவீழ்த்தப்பட்டார்.

கோவிட் - 19 தடுப்பூசி : சுதந்திர தினத்தன்று வெளியாகிறதா சோதனை முடிவுகள்?

டெல்லி : கரோனா தடுப்பு மருந்தான ’கோவாக்ஸின்’ தடுப்பூசியின் சோதனை முடிவுகளை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு டிஜிபியாக சுனில் குமார் பொறுப்பேற்பு!

சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு டிஜிபியாக சுனில்குமார் நேற்று (ஜூலை 2) பொறுப்பேற்றுக் கொண்டார்.

கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு கிடையாது- உயர் கல்வித்துறை

சென்னை: கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு கிடையாது என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆவின் பால் விற்பனையில் சாதனையா? பால் முகவர்கள் சங்கம் கேள்வி

சென்னை: ஆவின் பால் விற்பனை சாதனை பட்டியலில் முறைகேடு நடந்துள்ளது என பால்முகவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

'தும்பி துள்ளல்' வாசித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் பரிசு பெற்ற சிறுமி!

சென்னை : விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை கண்பார்வையற்ற சிறுமி ஒருவர் கீ-போர்டில் வாசித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், படக்குழுவினரும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து அவருக்கு பரிசளித்துள்ளனர்.

அறந்தாங்கி வன்கொடுமை: நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் - ஹர்பஜன் சிங் ட்வீட்!

சென்னை: அறந்தாங்கி வன்கொடுமையை நினைவு கூர்ந்து, “நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

சீன செயலிகளுக்கு தடை; இந்திய செயலிகளுக்கு வரவேற்பு

டெல்லி: இந்தியர்களாகிய நாம் இந்தியப் பொருள்கள் வாங்குவதில் நாட்டம் செலுத்த வேண்டும். இது இந்திய பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும் என்று கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களின் சங்கத்தின் தலைவரான பேராசிரியர் என்.கே. கோயல் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.