ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-1pm
top-10-news-at-1pm
author img

By

Published : Jun 29, 2020, 1:29 PM IST

'அமித் ஷா குண்டர்கள் மொழியில் பேசுகிறார்'- பூபேஷ் பாகல்

ராய்ப்பூர்: ராகுல் காந்தி குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், இதுபோன்ற மொழிகளை குண்டர்கள், குற்றவாளிகள்தான் பிரயோகிப்பார்கள் எனக் கூறியுள்ளார்.

தெலங்கானா உள் துறை அமைச்சருக்கு கரோனா?

ஹைதராபாத்: தெலங்கானா உள் துறை அமைச்சர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் இ-மொபிலிட்டி திட்டங்களில் பல கோடி மோசடி!

திருவனந்தபுரம்: கேரளாவில் இ-மொபிலிட்டி திட்டங்களில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றஞ்சாட்டியுள்ளார்.

'சிபிஜக்கு மாற்ற காலம்தாழ்த்துவது இறந்தவர்களுக்கு செய்யும் துரோகம்'

தூத்துக்குடி: சாத்தான்குள சம்பவத்தை சிபிஜ விசாரணைக்கு மாற்ற காலம் தாழ்த்துவது இறந்தவர்களுக்குச் செய்யும் துரோகம் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

காவலரை எட்டி உதைத்த முன்னாள் எம்.பி.யின் வைரல் காணொலி

சேலம்: ஓமலூர் சுங்கச்சாவடியில் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. காவலர் ஒருவரை எட்டி உதைத்தார். அது குறித்த காணொலி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 510 தமிழர்கள் மீட்பு

சென்னை: ஊரடங்கின் காரணமாக இங்கிலாந்து, கத்தார், துபாய் ஆகிய நாடுகளில் சிக்கித்தவித்த 510 போ் சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினார்.

மின் கட்டணத் தொகையைப் பார்த்து மிரண்டுபோன டாப்ஸி - விளக்கமளித்த அதானி எலெக்ட்ரிசிட்டி!

ஜூன் மாதத்துக்கு அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக நடிகை டாப்ஸி குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து மும்பை அதானி மின் நிறுவனம் தற்போது விளக்கமளித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் ஜெர்சியில் இடம்பெறவுள்ள #BlackLivesMatter லோகோ

சமத்துவத்தை வலியுறுத்தும்விதமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியினர் தங்களது ஜெர்சியில் #BlackLivesMatter லோகோவை அணிந்து களமிறங்குவதற்கு ஐசிசி அனுமதியளித்துள்ளது.

குரங்கை தூக்கில் தொங்கவிட்டு சித்ரவதைசெய்து கொன்ற மூவர் கைது

ஹைதராபாத்: கம்மம் மாவட்டத்தில் குரங்கு ஒன்றை தூக்கிலிட்டு சித்ரவதை செய்து கொன்ற இளைஞர்கள் மூவரை வனத் துறையினர் கைதுசெய்தனர்.

சசிகலா விடுதலை எப்போது? - சிறை நிர்வாகம் விளக்கம்

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.