ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-11-am
top-10-news-at-11-am
author img

By

Published : Nov 10, 2021, 11:21 AM IST

1. மழைக் காலத்தில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு - ராதாகிருஷ்ணன்

மழைக் காலத்தில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2. உருண்டு புரண்டு பைக் ரைடருடன் காவலர் சண்டை செய்யும் காட்சி வைரல்!

வாகன தணிக்கையின்போது, இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றவரை துரத்திச் சென்று காவல் உதவி ஆய்வாளர் நிறுத்தி விசாரித்தார்.
3. தொடர் மழை: 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகத் தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4. மீனாட்சி கோயிலில் கோலாட்ட உற்சவம் - ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சுவாமி

மீனாட்சியம்மன் கோயிலில் ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று (நவ.9) சுவாமியும், அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

5. கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு

அங்கன்வாடி, சத்துணவு திட்ட நேரடி பணிநியமனங்களில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

6. மழைக்காலங்களில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது - கே.எஸ் அழகிரி புகழராம்

மழைக்காலங்களில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

7. தொற்றுநோய் பரவாமல் இருக்க சிறப்பு மருத்துவ முகாம்கள்...

மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகள் மற்றும் நிவாரண முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்துள்ளது.

8. மணவாழ்க்கையைத் தொடங்கிய மலாலா!

பெண்களின் உரிமைகளுக்காக போராடி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த அசீர் மாலிக் என்பவரை கரம்பிடித்தார்.

9. உயர்மட்ட பாலம் கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கடம்பூர் அருகே உயர்மட்ட பாலம் கட்டக்கோரி மாணவர்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

10. பர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு

பர்கூர் மலைப்பாதையில் மண்சரிவால் ராட்சத பாறைகள் சாலையின் நடுவே விழுந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.