ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-11-am
top-10-news-at-11-am
author img

By

Published : Nov 7, 2021, 11:01 AM IST

1. புனித் ராஜ்குமார் மறைவு: பீரேஸ்வரர் கோயில் சாணியடி திருவிழாவில் மரியாதை

கோயில் திருப்பணிக்கு நன்கொடை வழங்கிய மறைந்த கன்னட நடிகர் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு சாணியடி திருவிழாவில் பக்தர்களால் மரியாதை செலுத்தப்பட்டது.

2. சென்னையில் கனமழை: குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் மக்கள் அவதி

சென்னையில் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3. தூய்மை பணியாளர்களின் பணி நேரம் குறைக்க அரசிடம் கோரிகை

தூய்மை பணியாளர்களின் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மருத்துவத்துறை கூட்டமைப்பு பொதுச் செயலாளர் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

4. இந்தியா 75 - மக்கள் மனதில் விடுதலை தீயை மூட்டிய பால கங்காதர திலகர்

நாடு தற்போது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிவரும் இந்த வேளையில், திலகரின் விடுதலை வாழ்வு மக்கள் மனதில் நீங்காது நிலைத்து நிற்கிறது.

5. வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்ட இடத்தை விற்ற மூவர் கைது

வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை விற்றதாக உரிமையாளர் உள்பட மூவரை மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.

6. கண்ணா லட்டு தின்ன ஆசையா... இதோ...

லட்டு என்றலே அனைவருக்கும் பிடிக்கும். இந்த காணொலியில் பேசன் லட்டு எப்படிச் செய்வது என்பது குறித்துப் பார்ப்போம். பேசன் லட்டை மிகவும் சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து முடிக்கலாம். இதை நீங்கள் வீட்டில் செய்து குடும்பத்தினருடன் உண்டு மகிழுங்கள்.

7. சத்தியமங்கலம் நடந்த சாணியடி திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி குமிட்டபுரத்தில் சாணியடி திருவிழா நடந்தது. ஊர்மக்கள் நலம் பெறவும் விவசாயம் செழிக்கவும் ஒருவருக்கொருவர் சாணத்தை வீசி வழிபாடு செய்தனர்.

8. பசுவிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி - நெகிழ்ச்சி வீடியோ

மயிலாடுதுறை மாவட்டம் செருதியூரிலுள்ள விவசாயி ஆறுமுகம் என்பவர் தனது பசு மாட்டை மாட்டுக் கொட்டகையில் கட்டியுள்ளார்.

9. T20 WORLDCUP: தென் ஆப்பிரிக்கா வெற்றியால் அரையிறுதியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா

டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. இருப்பினும், தென் ஆப்பிரிக்கா குறைவான ரன்ரேட் காரணமாக புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடம்பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது.

10. பாகுபலியின் தேவசேனாவுக்கு பிறந்தநாள்

பாகுபலியின் தேவசேனாவாக ஜொலித்த அனுஷ்கா செட்டிக்குப் 40 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.