ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 1PM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்..

1 மணி செய்திச் சுருக்கம்
1 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 30, 2021, 1:08 PM IST

  1. 'அண்ணா வழியில் பீடு நடைபோடும் ஆட்சி' - காஞ்சித்தலைவர் இல்லத்தில் சூளுரைத்த ஸ்டாலின்

பதவியேற்றபின் முதல்முறையாக பேரறிஞர் அண்ணா பிறந்து, வாழ்ந்த இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கிருந்த நினைவுக் குறிப்பேட்டில் நெகிழ்ச்சியுற குறிப்பு எழுதினார்.

2. தமிழ்நாடு புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பேற்பு

தமிழ்நாட்டின் 30ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திர பாபு பொறுப்பு ஏற்றுக்கொண்டார். புதிதாகப் பொறுப்பேற்கும் சைலேந்திர பாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார், திரிபாதி.

3. புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் இழுபறி: மவுனம் காக்கும் முதலமைச்சர்

புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்று நான்கு நாள்களாகியும், இதுவரை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யாமல் அம்மாநில முதலமைச்சர் மவுனம் காத்துவருகிறார்.

4. இ-மெயில் மூலம் மாணவிகளிடம் பேசிய சிவசங்கர் பாபா: இ-மெயிலை முடக்கிய சிபிசிஐடி!

சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாகப் பேச பயன்படுத்திய இ-மெயிலை சிபிசிஐடி அலுவலர்கள் முடக்கியுள்ளனர்.

5. சசிகலா உட்பட 501 பேர் மீது வழக்குப்பதிவு - முன்னாள் அமைச்சர் கொடுத்தப் புகாரில் நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்தப்புகாரின்பேரில் சசிகலா உட்பட 501 பேர் மீது திண்டிவனம் அருகே ரோஷணை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

6. கேம் விளையாடிய தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன் கைது!

தூத்துக்குடியில் அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடிய தங்கையை கொலைசெய்த அண்ணனை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

7. பிரபல உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: காணொலி வைரல்

ஆம்பூரில் பிரபல உணவக உரிமையாளரை இரு வேறு கட்சிப் பிரமுகர்கள் தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

8. சிம்பு பட நடிகையின் கணவர் உயிரிழப்பு

சிம்புவின் 'மன்மதன்' படத்தில் நடித்த மந்திரா பேடியின் கணவர், ராஜ் கவுஷல் மாரடைப்பு காரணமாக காலமானார்.

9. உலக நாயகன் படத்தை இயக்கும் வெற்றிமாறன்?

வெற்றிமாறன் இயக்கும் திரைப்படத்தில் கமல் ஹாசன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

10. ஓசூர் செல்லும் 'மாநாடு' படக்குழு

நடிகர் சிம்பு நடிக்கும் 'மாநாடு' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.