தமிழ்நாட்டில் 4,807 பேருக்கு கரோனா தொற்று உறுதி!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 18) 4,807 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 65 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
திட்டக்குடி திமுக எம்எல்ஏவுக்கு கரோனா!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சி.வெ. கணேசனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கறிக்கடை உரிமையாளருக்கு கத்தி வெட்டு - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!
சென்னை: கறிக்கடை உரிமையாளரை முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டும், நெஞ்சை பதைபதைக்க செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ராமநாதபுரம் புண்ணியத் தலங்களில் ஆடி அமாவாசை தினத்தன்று மக்கள் கூடத் தடை!
ராமநாதபுரம்: 144 தடை உத்தரவு காரணமாக, வருகின்ற திங்களன்று (ஜூலை 20) ஆடி அமாவாசை தினத்தன்று புண்ணியத் தலங்களில் மக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரதிராஜாவிற்கு தாதா சாகேப் பால்கே விருது - மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம்
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
'அனைவருக்கும் இணைய வசதி, டிஜிட்டல் இடைவெளி குறைப்பு'- அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
அனைத்து பயனர்களுக்கும் இணைய வசதி கிடைக்கும், டிஜிட்டல் இடைவெளியை குறைப்போம் என்று மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக காணொலி பேட்டியில் கூறினார்.
கொசுக்களால் கோவிட்-19 பரவுகிறதா ? - விளக்கும் அமெரிக்காவின் ஆய்வு!
வாஷிங்டன் : அமெரிக்காவின் கன்சாஸ் மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வில், கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் கொசுக்களால் மக்களிடம் பரவாதென உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் ஏஜிஆர் தொகை செலுத்திய வோடாஃபோன்!
வருவாய் பகிர்வு தொகை நிலுவையில் வோடாஃபோன்-ஐடியா நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளது. முன்னதாக, இந்நிறுவனம் மூன்று தவணைகளாக 6,854 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை அரசுக்குச் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தலைதூக்கும் கரோனா; எதிராகக் களமிறங்கும் சீனா
பெய்ஜிங்: இரண்டாம் கட்டமாக சீனாவில் பரவிவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது.
ஷாப்லூப்: வாங்க வீடியோ ஷாப்பிங் செய்யலாம்! - கூகுளின் அடுத்த அதிரடி
ஒரு கடைக்குச் செல்லாமல், நிஜ வாழ்க்கையில் ஷாப்பிங் செய்ய விரும்பும் தயாரிப்புகளின் தோற்றத்தையும் உணர்வையும் அனுபவிக்க உதவும் ஷாப்லூப் என்ற வீடியோ ஷாப்பிங் தளத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.