ETV Bharat / state

9 மணிச்செய்தி சுருக்கம் TOP 10 NEWS 9 PM - ஈடிவி பாரத்தின் 9 மணிச் செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 9 மணிச்செய்திச் சுருக்கம்...

top-10-news-9-pm
top-10-news-9-pm
author img

By

Published : Jul 11, 2021, 9:31 PM IST

1.சாதிப் பெயரை சொல்லி இழிவுப்படுத்தப்பட்ட ஊராட்சித் தலைவர்

சாதிப் பெயரை சொல்லி தொடுகாடு ஊராட்சி மன்றத் தலைவரை இழிவுபடுத்தியது தொடர்பாக தேசிய துப்பரவு பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

2.7.50 கோடி பரிசு வென்ற அமெரிக்க வாழ் தமிழ்நாட்டு விஞ்ஞானி!

இயற்பியல் துறையில் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞரின் மகன் சுர்ஜித் ராஜேந்திரனுக்கு 7 கோடியே 50 லட்சம் ரூபாயை பரிசாக அமெரிக்காவைச் சேர்ந்த சைமன் நிறுவனம் வழங்கியுள்ளது.

3.மேற்கு வங்கத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்

மேற்கு வங்க மாநிலத்தில் பணியாற்றி வந்த பெரம்பலூரைச் சேர்ந்த ராணுவவீரர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4.பாம்பன் பாலத்தில் தொடர் பராமரிப்புப்பணி - செப்.19 வரை ரயில்கள் இயக்கத்தடை

செப்டம்பர் 19ஆம் தேதி வரை, பாம்பன் பாலத்தில் ரயில்கள் இயக்கத் தடை விதித்து தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

5.முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் - சென்னை மாநகராட்சி

சென்னையில் தடுப்பூசி கையிருப்பு இருப்பதையொட்டி, மாநகராட்சி இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

6.கொய்யாக்களை சாக்கடையில் கொட்டிச் சென்ற விவசாயிகள் - அரசு நடவடிக்கை எடுக்குமா?

பழனி ஆயக்குடி கொய்யா சந்தையில் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பழங்களை சாக்கடையில் கொட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7.குன்னூரில் புதிய அரசுப்பேருந்துகளை இயக்க கோரிக்கை!

குன்னூரில் பழைய அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதடைந்து நிற்பது தொடர்கதையாக உள்ளதால் அப்பகுதி மக்கள் நகரப் பகுதியில் புதிய அரசு பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

8.கொடைக்கானலில் படகு சவாரிக்கு அனுமதிக்க கோரிக்கை

கொடைக்கான‌ல் ந‌ட்ச‌த்திர ஏரியில் ப‌ட‌கு ச‌வாரிக்கு அனும‌திக்க‌ வேண்டுமென‌ பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

9.புதுச்சேரி அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அம்மாநில அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

10.வலிமை: கண்ணில் லென்ஸ் மிரட்டும் அஜித்
கடைசியாக காட்பாதர் படத்தில் கண்ணில் லென்ஸ் வைத்து நடித்திருந்தார். அந்த கெட்டப் பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட காலத்துக்கு பிறகு அஜித் இப்படி தோன்றுகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.