1.100 நாள்களை நிறைவுசெய்யும் ஸ்டாலின் அரசு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 100 நாள்களை இன்றுடன் (ஆகஸ்ட் 14) நிறைவுசெய்கிறது.
2.பெட்ரோல் வரி குறைப்பு: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல் வரி மூன்று ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் இன்று (ஆக. 14) பெட்ரோல் லிட்டருக்கு 99.47 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
3.75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்: இந்திய மூவர்ணத்தில் மிளிர உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி, புர்ஜ் கலிஃபா!
நாட்டின் 75ஆவது சுதந்திர தினமான நாளையன்று, இந்திய சுதந்திர வரலாற்றை நினைவுகூறும் வகையில், அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் 75 புகழ்பெற்ற கட்டடங்களும் சுற்றுலாத் தலங்களும் இந்திய மூவர்ண ஒளியில் மிளிர உள்ளன.
4.தமிழ்நாடு பட்ஜெட் நடுநிலையான பட்ஜெட் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
திமுக அரசு தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு பட்ஜெட் நடுநிலையான பட்ஜெட் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
5.விவசாயி காலில் கிராம உதவியாளர் விழுந்து மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்!
அன்னூர் ஒட்டர்பாளையத்தில் கிராம உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால்சாமியின் காலில் விழுந்த விவகாரம் விவாதத்திற்கு உள்ளான நிலையில், கிராம உதவியாளர் முத்துச்சாமி, அலுவலகத்தில் வைத்து விவசாயி கோபால்சாமியை தகாத வார்த்தையில் பேசி, தாக்கும் மற்றொரு காணொலி தற்போது வெளியாகியுள்ளது.
6.அனைத்து அரசியல் தலைவர்களிடம் நட்புரிமை பாராட்டியவர் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்!
தமிழ்நாட்டின் பழமையான சைவமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின்ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவு நேற்று (ஆக.13) இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். மதுரை ஆதீனத்தின் 292ஆவது ஆதீனகர்த்தரான இவர் சைவத்தையும் தமிழையும் சமமாக போற்றி வந்தார்.
7.லோன் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் மோசடி: மூவர் குண்டர் சட்டத்தில் கைது!
லோன் வாங்கித் தருவதாகக் கூறி ஆன்லைனில் பணம் பெற்று மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த மூவரை காவல் துறையினர் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
8.தேமுதிகவினர் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் - விஜயகாந்த்
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளுவதற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
9.29 years of சூரியன் - 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'
நடிகர் சரத்குமாரின் திரைப்பயணத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த சூரியன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஆக. 14) 29 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
10.TNPL 2021: இறுதிப்போட்டியில் சேப்பாக் கில்லீஸ்
திண்டுக்கல் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில், சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.