ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

author img

By

Published : Jun 29, 2021, 8:57 AM IST

Updated : Jun 29, 2021, 9:29 AM IST

TOP 10 NEWS
TOP 10 NEWS

1.மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

கடந்த மே 10 முதல் ஜூன் 26ஆம் தேதிவரை பயன்படுத்தப்படாத, சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2.திருப்பதியைப் போல் திருவண்ணாமலை திருக்கோயில் மாறும் - அமைச்சர் எ.வ.வேலு

திருப்பதியைப் போல் திருவண்ணாமலை திருக்கோயில் மாட வீதிகளை, கான்கிரீட் சாலையாக மாற்றும் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

3.வில்சன் கொலை வழக்கு: குற்றவாளியைக் காவலில் எடுத்து விசாரிக்க மனு!

கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த வில்சன் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுள் ஒருவரான சியாபுதீனை, காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

4.காஞ்சிபுரத்தில் பட்டுசேலை வாங்க படையெடுத்த மக்கள் கூட்டம்

ஒன்றரை மாத இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் காஞ்சிபுரத்தில் துணிக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து, திருமணப் பட்டு சேலைகள் வாங்குவதற்காக வெளிமாநில, மாவட்ட வாடிக்கையாளர்கள் குடும்பத்தாருடன் காஞ்சிபுரத்தில் குவிந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

5.கோவையில் 'பாகுபலி' யானைக்கு காலர் ஐடி பொருத்தும் பணி ஒத்திவைப்பு

மேட்டுப்பாளையம் பகுதியில் ஊருக்குள் சுற்றி வரும் 'பாகுபலி' யானைக்கு காலர் ஐடி பொருத்தும் பணி, 10 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

6.'டெடி' பட இயக்குநருடன் ஆர்யா மீண்டும் கூட்டணி

நடிகர் ஆர்யா, 'டெடி' பட இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

7.கொடைக்கானல் பள்ளி மாணவன் தோப்புக்கரணத்தில் சாதனை

கொடைக்கானல் தனியார் பள்ளி மாணவர், ஒரு நிமிடத்தில் 88 முறை தோப்புக்கரணம் செய்து ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

8.viral video: 3 அடி பாம்பை விழுங்கிய 4 அடி பாம்பு

ஒடிசா மாநிலம் கோர்த்தா மாவட்டம் பாலகதி கிராமத்தில் 4 அடி நீளமுள்ள நாகப் பாம்பு ஒன்று 3 அடி நீளமுள்ள நாகத்தை விழுங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

9.வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

சென்னையில் 1 மாதத்தில் மட்டும் இதுவரை 9750 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

10.'விக்ரம்' படத்தில் இணைந்த 'கைதி' பிரபலம்

கமல் ஹாசனின் 232ஆவது திரைப்படத்தில் தான் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக நடிகர் நரேன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jun 29, 2021, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.