ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - undefined

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

5 மணி செய்திச் சுருக்கம்
5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jul 28, 2020, 5:04 PM IST

ஓபிசி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்!

டெல்லி: மருத்துவ கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய மூன்று மாத காலத்திற்குள் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

கரோனா காலத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட கோயில் மணி!

ராய்ப்பூர்: கரோனா வைரஸ் பரவல் காரணமாக, சத்தீஸ்கரின் தாம்டரி மாவட்டத்தில் உள்ள வித்தியவாஷினி கோயிலில் பிரத்யேகமாக வடிமைக்கப்பட்ட கோயில் மணி பொருத்தப்பட்டுள்ளது.

கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம்

சென்னை: மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்ட கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

மதுக்கடையில் மது அருந்திய காவலர்: காணொலி வைரல்

விருதுநகர்: ஆமத்தூர் அருகே பணியில் இருந்த காவலர் பாரில் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புலிகள் பாதுகாப்பில் முதன்மை வகிக்கும் இந்தியா- அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: புலிகள் காப்பகங்களை நிர்வகிப்பதில் இந்தியா தலைமை பொறுப்பு வகிக்கவும், மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தன்னை கலாய்த்த நெட்டிசனுக்கு நெற்றியடி பதில் கொடுத்த அமிதாப் பச்சன்!

நடிகர் அமிதாப்பச்சன், கோவிட் - 19 காரணமாக தான் உயிரிழந்து விடுவேன் என்று கூறியவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: முன்னாள் முதன்மை செயலரிடம் தொடரும் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலரான சிவசங்கரிடம் இன்றும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணை நடத்தவுள்ளது.

ப்யூன் வேலைக்கு விண்ணப்பித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!

டெல்லி: இந்தியா மாற்றத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் சைன், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் ப்யூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.

அறிமுகமான எஸ்பிஐ கிரெடிட் கார்ட்... பல சலுகைகளை அள்ள தயாராகும் ரயில் பயனர்கள்!

டெல்லி: டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த முயற்சியாக, ரயில் டிக்கெட் சலுகை உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கும் எஸ்பிஐ ரூபே கிரெடிட் கார்டை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு!

உலகளவில் நேற்று (ஜூலை 27) ஒரே நாளில் 2,16, 856 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்து 29 ஆயிரத்து 650ஆக அதிகரித்துள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.