ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-5pm
top-10-news-5pm
author img

By

Published : Jul 11, 2020, 5:02 PM IST

Updated : Jul 11, 2020, 5:23 PM IST

தமிழர்களின் கைவண்ணத்தில் உருவாகும் தெலங்கானா தலைமை செயலகம்!

ஹைதராபாத்: தெலங்கானாவில் அமையவுள்ள புதிய ஒருங்கிணைந்த சட்டப்பேரவை கட்டடத்ததை வடிவமைக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர் & பொன்னி என்ற கட்டடக்கலை நிறுவனத்தை அம்மாநில அரசு தற்போது தேர்வு செய்துள்ளது.

கோவிட்-19 கண்காணிப்புக் குழு குறித்த செய்தி போலியானது - உள் துறை அமைச்சகம்

டெல்லி: கோவிட்-19 கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகள் அனைத்தும் வதந்தி என மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் தேதி அறிவிப்பு!

சென்னை: 10,12ஆம் வகுப்பு பயிலவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 15ஆம் தேதி முதல் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

'கிராமங்களை கரோனா தொற்றிலிருந்து காக்க வேண்டும்' - கமல்ஹாசன்

சென்னை: தமிழ்நாட்டில் பல கிராமங்களில் ஆரம்பச் சுகாதார மையங்கள் முறையான கட்டமைப்பின்றி செயல்படுவதால், கரோனா தொற்று கிராமங்களில் பரவும் முன் அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார.

கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் காவலர்கள்- மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தருமபுரி: கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறைந்த கரோனா பாதிப்பு; சென்னை திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாள்களாக அதிகரித்துள்ளது.

'புதிய இயல்பு நிலையை ஏற்றுக்கொள்வது சற்று கடினம்' - அர்ஜுன் கபூர்

மும்பை: புதிய இயல்பு நிலைக்கு நம்மை இணைத்துக் கொள்வதற்குச் சில காலம் எடுக்கும் என நடிகர் அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் முழு ஊரடங்கு: பாலைவனம்போல் காட்சியளிக்கும் நகரங்கள்

லக்னோ: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாநிலத்தின் பெரும்பாலான நகரங்கள் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன.

'சாத்தான்குளம் வழக்கு: உரியவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்' - ஐ.நா. சபை

சாத்தான்குளம் மரணம் தொடர்பாக தெளிவான விசாரணை நடத்தி, குற்றமிழைத்த அனைவரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நா. சபை விரும்புகிறது.

Last Updated : Jul 11, 2020, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.