ETV Bharat / state

சுங்கச்சாவடி காவலர் அடித்துக் கொலை - வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம் - சுங்கச்சாவடி காவலர் கொலை

சென்னை: ஆவடி அருகே சுங்கச்சாவடி காவலரை வழிப்பறி கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

toll booth security murder  சுங்கச்சாவடி காவலர் கொலை  ஆவடி சுங்கச்சாவடி காவலர் கொலை
ஆவடி சுங்கச்சாவடி காவலர் கொலை
author img

By

Published : Jan 24, 2020, 12:07 PM IST

வண்டலூர்- மீஞ்சூர் 400அடி வெளிவட்ட சாலையில் பட்டாபிராம் அருகே புதிதாக அமையவுள்ள சுங்கச்சாவடியில் திருநின்றவூரைச் சேர்ந்த வெங்கடேசன்(50), காவலராக பணிபுரிந்து வந்தார்.

நேற்றிரவு, சுங்கச்சாவடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த லாரி ஓட்டுனர் சிவகுமார் என்பவரை வழிப்பறிக் கொள்ளையர்கள் தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றுள்ளனர். அதனை வெங்கடேசன் தடுக்க முயன்றுள்ளார்.

அப்போது,கொள்ளையர்கள் வெங்கடேசனைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்பின்பு மற்றொரு லாரி ஓட்டுநர் நரேஷ் குமார் என்பவரைத் தாக்கி, அவரிடமிருந்து செல்போன், 4 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்.

ஆவடி சுங்கச்சாவடி காவலர் கொலை

இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த சிவகுமாரை சிகிச்சைக்காகவும், காவலர் வெங்கடேசன் உடலை உடற்கூறாய்விற்காகவும் கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், முன்னதாக கொள்ளையர்கள் அசோக் என்பவரைக் கத்தியால் வெட்டி இருசக்கர வாகனத்தைப் பறித்துச் வந்துள்ளதாகவும், வெள்ளவேடு பகுதியில் இரண்டு பேரை தாக்கியதும் தெரியவந்துள்ளது.

ஆவடி அருகே வழிப்பறி கொள்ளையர்கள் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிவகாசி சிறுமி கொலை வழக்கில் அசாம் இளைஞர் கைது!

Intro:ஆவடி அருகே சுங்கச்சாவடி காவலர் அடித்து கொலை வழிப்பறிக் கொள்ளையர்கள் அட்டூழியம்.

Body:ஆவடி அருகே சுங்கச்சாவடி காவலர் அடித்து கொலை வழிப்பறிக் கொள்ளையர்கள் அட்டூழியம்.

திருநின்றவூரை சேர்ந்த வெங்கடேசன் /50 சென்னை வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையில் பட்டாபிராம் அருகே உள்ள புதிதாக அமையவுள்ள சுங்கச்சாவடியில் காவலராக உள்ளார்.இரவு பணியின் போது சுங்கச்சாவடியில் வழிப்பறி கொள்ளையர்கள் அவ்வழியாக வந்து ஓய்வு எடுத்து கொண்டு இருந்த கண்டைனர் லாரி ஓட்டுனர் சிவகுமார் என்பவரை தாக்கி செல்போன்,பணத்தை பரித்துகொண்டு இருந்தனர்.அதனை காப்பாற்ற சென்றுள்ளார்.கொள்ளையர்கள் காவரை தாக்கியத்தில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுமட்டுமல்லலாமல் மற்றொரு கண்டைனர் லாரி ஓட்டுநர் நரேஷ் குமார் தாக்கி செல்போன், 4 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளனர். அப்போது அருகே உள்ளவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர்
உள்ளிட்ட காவலர்கள் கொள்ளையர்களை பிடிக்க முயற்சி செய்தபோது கொள்ளையர் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த சிவகுமார் கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயிர் இழந்த வெங்கடேசன் உடல் பிரேத பரிசோதனைக்கு கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தொடர்ந்து முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முன்னதாக வழிப்பறிக் கொள்ளையர்கள் அசோக் என்பவரை கத்தியால் வெட்டி இருசக்கர வாக்னத்தை பறித்து சென்றுள்ளனர்.அதேபோல் வெள்ளவேடு பகுதியில் 2 பேரை தாக்கியதில் இருவருக்கு காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி.ஆவடி அருகே அடுத்தடுத்து கொள்ளையர்கள் கொலை,கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.