தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 26) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 84 ஆயிரத்து 676 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 1,958 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஏழு நபர்களுக்கும், ஆந்திரா, கேரளாவிலிருந்து வந்த தலா இரண்டு நபர்களுக்கும், டெல்லியிலிருந்து வந்த ஒருவருக்கும் என 1,971 நபர்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 88 லட்சத்து 55 ஆயிரத்து 868 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் எட்டு லட்சத்து 75 ஆயிரத்து 190 நபர்கள் தீநுண்மி தொற்றுக்கு ஆளாகி இருந்தார்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 11 ஆயிரத்து 318 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து இன்று (மார்ச் 26) 131 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்து 51 ஆயிரத்து 222 என உயர்ந்துள்ளது. அதேபோல் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் ஐந்து பேர், தனியார் மருத்துவமனையில் நான்கு பேர் என மொத்தம் ஒன்பது பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் புதிதாக 739 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 205 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 173 நபர்களுக்கும், தஞ்சாவூரில் 111 நபர்களுக்கும் திருவள்ளூரில் 107 நபர்களுக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.
மாவட்டம் வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
சென்னை - 2,46686
கோயம்புத்தூர் - 57,891
செங்கல்பட்டு - 55,189
திருவள்ளூர் - 45,507
சேலம் - 33,242
காஞ்சிபுரம் - 30,211
கடலூர் - 25,477
மதுரை - 21,626
வேலூர் - 21,357
திருவண்ணாமலை - 19,625
திருப்பூர் - 19,046
தஞ்சாவூர் - 19,219
தேனி - 17,258
கன்னியாகுமரி - 17,396
விருதுநகர் - 16,802
தூத்துக்குடி - 16,491
ராணிப்பேட்டை - 16,378
திருநெல்வேலி - 15,964
விழுப்புரம் - 15,402
திருச்சி - 15,353
ஈரோடு - 15,190
புதுக்கோட்டை - 11,792
நாமக்கல் - 12,019
திண்டுக்கல் - 11,770
திருவாரூர் - 11,766
கள்ளக்குறிச்சி - 10,932
தென்காசி - 8,666
நாகப்பட்டினம் - 8,902
நீலகிரி - 8,582
கிருஷ்ணகிரி - 8,355
திருப்பத்தூர் - 7,747
சிவகங்கை - 6,921
ராமநாதபுரம் - 6,527
தர்மபுரி - 6,746
கரூர் - 5,605
அரியலூர் - 4,800
பெரம்பலூர் - 2,302
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 970
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,050
ரயில் மூலம் வந்தவர்கள் 428