சென்னை: நாளை மறுநாள் (ஜன.7) கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று (ஜன.5) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நாளை (ஜன.6) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (ஜன.7) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 8ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜன.9ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பேரையூர் (மதுரை) 10 செ.மீ, ராஜபாளையம் (விருதுநகர்) 8, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), வத்திராயிருப்பு (விருதுநகர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 7 செ.மீ, சின்கோனா (கோயம்புத்தூர்) 6 செ.மீ, சிவகாசி (விருதுநகர்), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 5 செ.மீ, எழுமலை (மதுரை), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), திருப்பூர் PWD (திருப்பூர்), ஆண்டிபட்டி (தேனி) தலா 4 செ.மீ,
வைகை அணை (தேனி), பெரியகுளம் (தேனி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சோத்துப்பாறை (தேனி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), போடிநாயக்கனூர் (தேனி), சிவகிரி (தென்காசி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), மஞ்சளாறு (தேனி), அரண்மனைப்புதூர் (தேனி), பர்லியார் (நீலகிரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), நிலக்கோட்டை (சென்னை), TNAU கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்) தலா 3 செ.மீ, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி),
குந்தா பாலம் (நீலகிரி), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), குன்னூர் (நீலகிரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), உசிலம்பட்டி (மதுரை), மேல் பவானி (நீலகிரி), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), தேக்கடி (தேனி),
மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), அவலாஞ்சி (நீலகிரி), கெத்தை (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), கோடம்பாக்கம் (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), கருப்பாநதி அணை (தென்காசி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கேத்தி (நீலகிரி) தலா 2 செ.மீ, பெரியாறு (தேனி), சாத்தியார் (மதுரை), மண்டலம் 2 மீனம்பாக்கம் (சென்னை), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), சென்னை (N) AWS (சென்னை), பெரம்பூர் (சென்னை), கோடிவேரி (ஈரோடு),
கின்னக்கோரை (நீலகிரி), ACSமருத்துவக்கல்லூரி ARG (காஞ்சிபுரம்), எமரால்டு (நீலகிரி), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), திரு.வி.க நகர் (சென்னை), சீர்காழி (மயிலாடுதுறை), மண்டலம் 1 வளசரவாக்கம் (சென்னை), மண்டலம் 2 D156 முகலிவாக்கம் (சென்னை), அன்னூர் (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி), கல்லிக்குடி (மதுரை), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), வளசரவாக்கம் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்),
அம்பத்தூர் (சென்னை), ஆழியார் (கோயம்புத்தூர்), விருதுநகர் AWS (விருதுநகர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), ஊத்து (திருநெல்வேலி), விருதுநகர் (விருதுநகர்), பாபநாசம் (திருநெல்வேலி), சங்கரன்கோயில் (தென்காசி), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), மண்டலம் 02 மணலி (சென்னை), திருமங்கலம் (மதுரை), திண்டுக்கல் (திண்டுக்கல்), கூடலூர் பஜார் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி),
மண்டலம் 02 D15 மணலி (சென்னை), உதகமண்டலம் (நீலகிரி), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), கூடலூர் (தேனி), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), மீ மாத்தூர் (கடலூர்), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சண்முகாநதி (தேனி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), மண்டலம்4 U41 பெருங்குடி (சென்னை) தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை: இன்று (ஜன.5) கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜன.6 மற்றும் ஜன.7 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய கோரிய வழக்கு ஒத்திவைப்பு!