சென்னை :தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in, www.tngasa.in என்கிற இணையதளத்தில் மாணவர்கள் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம்தேதி வரையில் விண்ணப்பிக்க முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர்கள் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு இன்றுவரை விண்ணப்பிக்கலாம்.
கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் மூலம் விண்ணப்பம் செய்த மாணவர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும்.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த கல்லூரிக்கு தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் நடைபெறும் எனக் கல்லூரிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கை...அறிக்கைக்கு உத்தரவு