தேச துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் அவர் ஒராண்டு சிறை, ரூ.10அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் அபராத தொகையை உடனே கட்டினார். இதையடுத்து தீர்ப்பை நிறுத்துவைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்ற நீதிமன்றம் தீர்ப்பை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்தது.
இதைதொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக தண்டனை பெற்றதற்கு மகிழச்சியடைகிறேன். தண்டனையை குறைக்க நான் கோரிக்கை வைக்கவில்லை. தண்டனையை குறைக்கமால் அதிகபட்சம் ஆயுள்தண்டனை என்றாலும் வழங்க நீதிபதியிடம் வலியுறுத்தினேன் என்றார்.