ETV Bharat / state

Teachers Day : ஆசிரியர் தினம்! அணையா விளக்காய் ஒளிவீசும் ஆசிரியர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 7:56 AM IST

Teacher's Day : இன்று (செப். 5) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அணையா விளக்காய் தொடர்ந்து ஒளி வீசி வரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.

Teachers Day
Teachers Day

ஐதராபாத் : இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. வட்டம் ஒரு மையப் புள்ளியில் தொடங்குகிறது என்பார்கள். அதன்படி உலகில் இருக்கும் கோடிக்கணக்கான அறிஞர்கள், தத்துவ மேதைகள், சாதனையாளர்கள் மையப் புள்ளி ஒரு ஆசிரியர் என்றால் அது மிகையல்ல.

யாரும் சென்றிராத நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3ஐ தரையிறக்கி சர்வதேச அரங்கில் இந்தியாவை திரும்பி பார்க்கச் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் விளையாட்டு அரங்கில் 5 முறைக்கு மேல் உலக சாமிபியன் பட்டம் வென்ற நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சனையும் தண்ணீர் குடிக்க வைத்த இளம் சிறுவன் பிரஞ்ஞானந்தாவை உருவாக்கியதும் ஒரு ஆசிரியர் தான்.

அப்படி எந்தவித பலனையும் எதிர்பாராமல் பல அறிஞர்களையும், பன்முகத் தன்மை கொண்டவர்களையும் உருவாக்க உழைத்து கொண்டு இருக்கும் ஆசிரியர்களை கொண்டாட ஒருநாள் போதும் என்றால் அது நிச்சயம் பொருந்ததாது. ஆசிரியர்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும் மெழுகு தன்னை வருத்திக் கொண்டு ஒளியை வழங்குவது போல் ஆசிரியர்கள் தங்கள் வாழ்நாட்களை மாணாக்கர்களுக்காகவே செலவிட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்த சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனை நினைவு கூறும் நாளாக இன்று ஆசிரியர் தினத்தை கொண்டாடுகிறோம்.

1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணியில் பிறந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தனது இளமை காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர், சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியையும் முடித்தார்.

கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் தத்துவம் பற்றிய அவரது ஆழமான புரிதலும், ஒரு அன்பான ஆசிரியராகவும் சிறந்த வழிகாட்டியாகவும் தன் மாணவர்களுக்கு தோன்றினார்.

சிறந்த தத்துவ ஞனம் மற்றும் ஆழமான புரிதல், சிக்கலான கருத்துக்களை எளிமையாக, தொடர்புபடுத்தக் கூடிய விதத்தில் கையாளும் திறனும் அவரை குடியரசுத் தலைவர் நிலைக்கு கொண்டு சென்றது. 1949 முதல் 1952 வரை சோவியத் யூனியனுக்கான இந்தியாவின் இரண்டாவது தூதராக இருந்தவர், 1952 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகவும், 1962 முதல் 1967 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் தனது அயராத பங்கை ஆற்றினார்.

கல்விக்காக அவர் ஆற்றிய பங்களிப்பும், அசிரியர் பணிக்கான அவரது அர்ப்பணிப்பையும் பார் போற்றும் வகையில் அறியப்படுத்த வேண்டுமென அரசின் முயற்சியால் அவர் பிறந்த தினமான இன்று (செப். 5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. வளமான மற்றும் சிறந்த எதிர்காலத்தை நிர்மாணிக்கும் இளம் சமுதாயத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள அசிரியர்களை இந்நாளில் மறவாமல் இருப்பது நாம் அவர்களுக்கு ஆற்றும் தொண்டு என்றால் அது மிகையல்ல.

இதையும் படிங்க : உதயநிதியின் 'சனாதானம்' குறித்த பேச்சுக்கு பொங்கி எழும் பாஜக - ஆதரவாக களத்தில் குதித்த கூட்டணி கட்சிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.