சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால் தினமும் தங்கத்தின் விலையில் மாற்றம் இருந்து வந்தது. தங்கம் விலை என்பது உலக பொருளாதார நிலை, அமெரிக்க நாட்டின் டாலருக்குச் சமமான இந்திய ரூபாயின் மதிப்பைக் கணக்கிட்டு தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இதனால் தங்கத்தின் விலையில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகளவில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், மத்திய வங்கிகளால் உயர்த்தப்படும் வட்டி விகிதங்கள் எனப் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதால் அதன் மீதான முதலீடுகள் உயர தங்கம் விலையும் தற்போது ஏற்ற இறக்கம் அதிகரித்து வருகிறது.
தங்கம் என்பது பொதுவாக எல்லா தரப்பினருக்கு மிகவும் பிடித்தமானது. தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.
தங்கத்தின் விலை கடந்த ஜூலை 26 ஆம் தேதி ரூ.44,416-க்கு விற்கப்பட்ட வந்த நிலையில், ஜூலை 27 அன்று ஒரே நாளில் 22 கேரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.44,640-க்கு விற்பனையானது. இந்த செய்தி மக்களிடையே மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று (ஜூலை.28) ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேப்போல் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,550க்கு விற்பனையானது. இதனால் மக்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தனர். ஆனால், இன்று (ஜூலை 29) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து உள்ளது. இதனால் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.44,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,565க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 50 காசு உயர்ந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: 25 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் - திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம்